ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்ட்ரியா தனது அற்புத நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இவர் ஆரம்பத்தில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
மேலும் இவர் தனது சீரிய நடிப்பை ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, அனல் மேல் பனித்துளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வெளிப்படுத்தி இருந்தார்.
ஆண்ட்ரியா சில காலம் காதலில் விழுந்திருந்தார். அந்த காதல் தோல்வி அடைந்ததை அடுத்து சினிமா உலகை விட்டு சற்று விலகி இருந்தார். அதனை அடுத்து தற்போது சகஜ நிலைக்கு வந்த இவர் மீண்டும் திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
இதனை அடுத்து நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஆண்ட்ரியாவிடம் வடசென்னை படத்தில் இயக்குனர் அமீரோடு இணைந்து நடித்த காட்சிகள் பற்றி கேட்கப்பட்டது. அத்தோடு ரொமான்ஸ் காட்சிகளில் அவர் நடிக்க சிரமப்பட்டதாக கேள்விப்பட்டதை குறித்து கேள்வி எழுப்பினார்கள்.
இந்த கேள்விக்கு பதில் அளித்து பேசும் போது ஆண்ட்ரியா, அமீர் அந்த மாதிரி காட்சிகளில் நடிப்பதற்கு மிகவும் வெட்கப்படுவார். மேலும் அவர் அந்த காட்சிகளில் நடிப்பதற்கு சற்று தடுமாறியது உண்மை தான் என்ற கருத்தை பதிவு செய்து இருக்கிறார். இதனை அடுத்து அமீர் அது போன்ற காட்சிகளில் நடிக்க சற்று தடுமாறியது உண்மை என்று உறுதியாக்கப்பட்டுள்ளது.
இப்போ என்னை எடுத்துக்கோங்க.. நான் ஒரு பெண் என்றாலும் அது போன்ற லவ் சீன்களில் நடிக்க வெக்கப்பட்டதில்லை. எனக்கு பல படங்களில் இது போன்ற காட்சிகளில் நடித்த அதிக அளவு எக்ஸ்பிரியன்ஸ் இருந்ததால் நான் எளிதில் நடித்து விட்டேன்.
ஆனால் அவரது நிலைமை அப்படி இல்லை என்று கலகலப்பாக பேசியிருக்கிறார். இந்த விஷயம் தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டதோடு இணையத்தில் அதிக அளவு பகிரக்கூடிய விஷயமாகவும் மாறி உள்ளது.