என்னைத்தான் வேணும்ன்னு கேட்டார்.. சரின்னு சொல்லிட்டேன்.. மேடையிலேயே ஓப்பனாக பேசிய ஆண்ட்ரியா..!

தமிழ் சினிமாவில் அழகை மட்டுமே பிரதானமாக வைத்து ஜெயித்த நடிகைகள் பலரும் இருக்கின்றனர். எப்போதுமே அவர்கள் அழகு மட்டுமே அவர்களை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கும். ஆனால் ஒரு சில நடிகைகள் அழகையும் கடந்து, தங்களின் தங்களிடம் உள்ள திறமையை,ஆற்றலை வெளிப்படுத்தி நல்ல ஒரு நடிகையாக தங்களை ரசிகர்கள் மத்தியில் சிறப்புக்குரியவராக மாற்றிக் கொள்கின்றனர்.

ஆண்ட்ரியா

பல்வேறு திறமைகளை கொண்ட நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நடிகையாக இருக்கிறார். அவர் கௌதம மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் சரத்குமார் மனைவியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து வடசென்னை, விஸ்வரூபம் 1, விஸ்வரூபம் 2, உத்தமவில்லன், அரண்மனை 2, ஆயிரத்தில் ஒருவன், தரமணி, துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக நடிகை ஆண்ட்ரியா மாறினார்.

சிறந்த பாடகி

ஆண்ட்ரியா, நடிகை மட்டும் அல்ல. சிறந்த பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பல படங்களில் பல முக்கிய ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். குறிப்பாக மதராசப்பட்டணம் படத்தில் பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையேபாடலை பாடியது ஆண்ட்ரியா தான்.

அதேபோல் வேட்டையாடு விளையாடு படத்தில் காக்க காக்க என்ற பாடலும், புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலும் ஆண்ட்ரியா பாடியதுதான்.

பின்னணி குரல் கலைஞர்

ஆண்ட்ரியா இவ்வளவு சிறந்த பாடகி என்பது, ரசிகர்கள் பலருக்கும் தெரியாது. அதேபோல் ஆண்ட்ரியா சிறந்த டப்பிங் கலைஞர். அவர் ஆடுகளம் படத்தில் நடிகை டாப்ஸிக்கும், வேட்டையாடு விளையாடு படத்தில் கமாலினி முகர்ஜிக்கும், அதேபோல் நண்பன் படத்தில் இலியானாவுக்கும் பின்னணி பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி தொடர்ந்து தமிழில் ஒரு குறிப்பிட்டதக்க கவனிக்கப்படும் சிறந்த நடிகையாக இருந்து வரும் நடிகை ஆண்ட்ரியா, தமிழில் தனக்கு பிடித்தமான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இசைக் கச்சேரிகளில்…

சமீப காலமாக ஆண்ட்ரியா வெளிநாடுகளில் நடக்கும் யுவன் ஷங்கர் ராஜா போன்றவர்களின் இசை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். ஆண்ட்ரியாவை நேரில் பார்ப்பதற்கும், அவர் பாடிய பாடல்களை நேரில் அவர் பாடுவதை கேட்பதற்காகவும் ரசிகர் கூட்டம் அலைமோதுகிறது.

அதனால் பல நாட்கள் ஆண்ட்ரியா வெளிநாடுகளில் முகாமிட்டு, இது போன்ற இசைக்கச்சேரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கா என்ற திரைப்படத்தில்…

நடிகை ஆண்ட்ரியா கா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அட்வென்ச்சர் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் இயக்குனர் பற்றி சமீபத்திய மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார் ஆண்ட்ரியா.

நான்தான் வேண்டும்

அவர் கூறியதாவது, இந்த கதையை எழுதும் போது, இயக்குனர் என்னை நினைத்துக் கொண்டுதான் எழுதி இருக்கிறார். எனவே இந்த கதைக்கு என்னைத் தான் வேணும் என கேட்டார். சரி என சொல்லிவிட்டேன்.

பொதுவாக ஹீரோக்களுக்கு தான் இப்படி கதை எழுதுவார்கள். ஆனால் எனக்காக ஒரு கதையை எழுதி இருக்கிறேன் என்று ஒரு டைரக்டர் கூறும் பொழுது, மறுக்க மனம் வரவில்லை என ஆண்ட்ரியா பேசி இருக்கிறார்.

என்னைத்தான் வேணும்ன்னு டைரக்டர் கேட்டார்.. சரின்னு சொல்லிட்டேன் எனறு மேடையிலேயே ஓப்பனாக பேசிய ஆண்ட்ரியா, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version