Site icon Tamizhakam

எனக்கு இந்த பழக்கம் இருக்கு.. கல்யாணம் தேவையில்ல.. வெளிப்படையாக கூறிய ஆண்ட்ரியா.. விளாசும் ரசிகர்கள்..

நடிகை ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிகர் சரத்குமாருக்கு மனைவியாக நடித்து அறிமுகமானார். அந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.

தொடர்ந்து விஸ்வரூபம், அரண்மனை 2, வடசென்னை, மாஸ்டர், தரமணி, பிசாசு, துப்பறிவாளன், உத்தம வில்லன் என ஆண்ட்ரியா பல படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக ஆண்ட்ரியா ரசிகர்களால் கவனிக்கப்பட்டார்.

ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா நடிகை மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த பின்னணி பாடகியாகவும் இருக்கிறார். பல படங்களில் பல ஹிட் படங்களில் பாடியிருக்கிறார். வேட்டையாடு விளையாடு, அந்நியன் என பல படங்களில் பாடியவர் ஆண்ட்ரியா.

அதுமட்டுமின்றி ஆண்ட்ரியா ஒரு பின்னணி டப்பிங் கலைஞர். ஆடுகளம் படத்தில் டாப்ஸிக்கும், வேட்டையாடு விளையாடு படத்தில் கமாலினி முகர்ஜிக்கும், நண்பன் படத்தில் இலியானாவுக்கும் பின்னணி குரலாக ஒலித்தது ஆண்ட்ரியா தான்.

வெளிநாடுகளில் நடக்கும் யுவன் சங்கர் ராஜா போன்றவர்களின் இசைநிகழ்ச்சிகள், கலை இரவுகளில் பங்கேற்று பாடி வருகிறார் ஆண்ட்ரியா.

படுகவர்ச்சியான காட்சிகளிலும்….

சினிமா நடிப்பு, பாடகி, டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்ட ஆண்ட்ரியா, இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். ஆனால் படங்களில் படுகவர்ச்சியான காட்சிகளிலும் சங்கடமே இல்லாமல் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான நடிகைகள் குடும்ப வாழ்க்கையை ஆரம்பத்திலேயே வெறுப்பதற்கு காரணம், திருமணம் செய்து அடுத்த சில ஆண்டுகளில் எப்படியும் விவாகரத்து செய்துவிடுவோம் என்ற நிலையில், திருமணம் செய்யாமல் தவிர்ப்பதும் நல்லது என நினைக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:  ஒரே நைட் தான்.. 4 மாசம்.. காதலன் செய்த வேலை.. பிரியா பவானி ஷங்கர் கண்ணீர்..!

அந்த வகையில் ஆண்ட்ரியா இன்னும் திருமணம் குறித்த ஆர்வம் இன்றி காணப்படுகிறார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் இசையமைப்பாளர் அனிருத் உடன் நெருக்கமான அவரது புகைப்படங்கள் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது. அதன்பின் பிரேக்கப் ஆகி விட்டது.

கடந்து வந்து விட்டேன்

இதுகுறித்து பேசிய நடிகை ஆண்ட்ரியா கூறியதாவது,
20, 25 வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அழுத்தம் எனக்கு இருந்தது, ஆனால் தற்போது எனக்கு 38 வயதாகிறது.அதையெல்லாம் கடந்து வந்து விட்டேன்.

ஒரு பெண் திருமணமானால்தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதெல்லாம் போலியானது. திருமணம் செய்து கொள்ளாமலே என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. அதற்கு நான் பழக்கப்பட்ட விட்டேன்.

எனவே எனக்கு கல்யாணம் பற்றி கவலை இல்லை, தேவையும் இல்லை எனக் கூறியிருந்தார் நடிகை ஆண்ட்ரியா.

திருமணமான நடிகர் ஒருவர்…

ஏற்கனவே திருமணமான நடிகர் ஒருவர் என்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தொந்தரவு செய்தார் என்றெல்லாம் புகார் கொடுத்தவர் நடிகை ஆண்ட்ரியா என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:  நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

இந்நிலையில் தன்னுடைய திருமணம் பற்றி கவலை இல்லை என்ற ஆண்ட்ரியாவின் ஸ்டேட்மெண்ட்டை பார்த்து ரசிகர்கள், இதுபோல உங்கள் பெற்றோர் நினைத்து இருந்தால் நீங்கள் பிறந்திருக்கவே மாட்டீர்கள் என்று கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து விடுகின்றனர்.

மகிழ்ச்சியாக இருப்பது என்பது இந்த பழக்கம் எனக்கு இருக்கு. அதனால் கல்யாணம் தேவையில்ல என்று வெளிப்படையாக கூறிய ஆண்ட்ரியா குறித்து சகட்டுமேனிக்கு ரசிகர்கள் விளாசுகின்றனர்.

Exit mobile version