பணம் வேணாம்.. இதை கொடுத்தால்.. ஆடையின்றி நடிக்க தயார்.. ஆண்ட்ரியா பேச்சை கேட்டீங்களா..

நடிகையும், பாடகியும் ஆன ஆண்ட்ரியா பின்னணி குரல் கொடுக்கக்கூடியவர்களில் ஒருவர். இவர் ஆரம்ப காலத்தில் மிகச்சிறந்த பின்னணி பாடகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். இதனை அடுத்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இவர் சென்னையில் இருக்கும் அரக்கோணத்தில் ஆங்கில இந்திய குடும்பத்தில் பிறந்தவர். நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் கல்வி பயின்றவர். இவருடைய தந்தை வழக்கறிஞராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி இருக்கிறார்.

நடிகை ஆண்ட்ரியா..

நடிகை ஆண்ட்ரியா ஆரம்ப காலங்களில் திரைப்படங்களில் பாடுவதை தொழிலாக செய்து வந்தார். இதனை அடுத்து இவருக்கு தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் நடிகையாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் சரத்குமாரோடு இணைந்து நடித்திருந்தார்.

இதையும் படிங்க: குடி போதையில் ஆண் நண்பருடன்.. எதிர்நீச்சல் மதுமிதா செய்த பலே வேலை.. போலீஸார் தீவிர விசாரணை..!

இதனை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் தனது வித்தியாசமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.

இந்நிலையில் கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் அற்புதமான பாடல் பாடிய இவர் 2011 ஆம் ஆண்டு வெக்கட் பிரபு இயக்கத்தில் வெளி வந்த மங்காத்தா திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து கமலஹாசன் உடன் விஸ்வரூபம் படத்திலும் வெற்றிமாறனின் வட சென்னை திரைப்படத்திலும் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்.

ஆடையின்றி நடிக்க தயார்..

சினிமாவில் சிறப்பான முறையில் நடித்து வந்த இவர் திடீர் என்று காதலில் விழுந்து அந்த காதல் தோல்வி அடைந்ததின் காரணத்தால் சில காலம் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இதனை அடுத்து தற்போது மீண்டும் காதல் தோல்வியில் இருந்து மீண்டு வந்த இவர் சினிமாவில் களம் காண முடிவு செய்திருக்கிறார்.

அந்த வகையில் இவருக்கு சிறப்பான சினிமா வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய பட்சத்தில் ஆடை இன்றி நடிக்க தயார் என்று கூறியதை பார்த்து பலரும் ஷாக்காகி விட்டார்கள். இது ஆண்ட்ரியா பேசிய பேச்சா என்பது போல கேட்டு வருகிறார்கள்.

உண்மையில் ஆண்ட்ரியா ஆடையின்றி நடிப்பதற்கு பணம் ஏதும் கொடுக்க வேண்டாம். இது இருந்தால் போதும் என்று பேசிய பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக மாறிவிட்டது.

பணத்திற்காக அல்ல கதைக்காக..

மேலும் இவர் ஆடையின்றி நடிப்பேன் என்று கூறியது பரவலாக பேசும் பொருள் ஆன நிலையில் ஒரு படத்தில் மோசமான காட்சியில் நடிக்கவும் தயாராகிவிட்டேன். இவ்வளவு ஏன் ஆடை இன்றி நடிக்க வேண்டுமா? அதற்கும் நான் தயாராக இருக்கிறேன். ஏனென்றால் நான் ஒரு நடிகை என்பதால் அது என்னுடைய வேலை என்ற கருத்தை கூறுகிறார்.

அத்தோடு ஆடை இல்லாமல் காட்சிகளில் நடிக்க நான் எதிர்பார்ப்பது பணம் கிடையாது. பலரும் பணத்திற்காக இப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்கிறார்கள். பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. திரைப்படத்தில் இப்படி நடித்து தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை.

இதையும் படிங்க: நான் செய்தி வாசிக்கும் போதே… அவருடைய மரணம்.. அடுத்த நிமிஷமே இதை எடுத்து வச்சேன்.. நிர்மலா பெரியசாமி..

ஆடை இல்லாமல் நடிப்பதற்கு பணத்தை தாண்டி ஒரு நல்ல காரணம் தேவை. இந்த கதையில் இப்படி ஒரு விஷயம் நடக்கிறது இதனால் இப்படியான காட்சி அவசியம் தேவைப்படுகிறது.

அதாவது நான் ஆடையின்றி நடிக்க தயாராக இருக்கிறேன் என்பதற்காக வம்படியாக ஒரு காட்சியை திணித்தால் அது எனக்கு தெரிந்து விடும். அதைத் தாண்டி படத்திற்கு கதையின் களத்திற்கும் அந்த காட்சி அத்தியாவசியம் என்றால் அதற்கு உண்டான காரணத்தை அவர்கள் கொடுத்தால் நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று நடிகை ஆண்ட்ரியா பேசியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version