ஒரு செருப்பின் விலை இவ்வளவா..? அனிகா சுரேந்திரனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

கேரளாவில் மஞ்சேரியில் பிறந்து வளர்ந்த அனிகா சுரேந்திரன் மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார். 2010 – ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளி வந்த கதை துடாருன்னு என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

இவர் தனது பள்ளி படிப்பை கோழிக்கோடு தேவகிரி சிஎம்ஐ பப்ளிக் பள்ளியில் படித்தார். இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து பக்குவமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் பலரை பெற்று இருக்கிறார்.

நடிகை அனிகா சுரேந்திரன்..

தமிழைப் பொருத்த வரை 2015-இல் வெளி வந்த என்னை அறிந்தால் என்ற படத்திலும் 2019-ல் வெளி வந்த விசுவாசம் படத்திலும் தல அஜித்திற்கு ரீல் மகளாக நடித்த இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக் கூடிய அனிகா சுரேந்தர் அவ்வப்போது வண்ண, வண்ண உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொள்வார்.

மேலும் வயதுக்கு மீறிய கவர்ச்சியை காட்டி வரும் இவர் தற்போது திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தெலுங்கு திரைப்படத்தில் கூடுதல் கவர்ச்சியோடு நடித்திருக்கும் இவரை பற்றி ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்கள்.

ஒரு செருப்பின் விலை எவ்வளவா?..

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவு ஃபாலோயர்களை வைத்திருக்கக் கூடிய அனிகா சுரேந்தர் தற்போது பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார்.

நடிகை அனிகா சுரேந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது மும்பையில் நான் ஒரு செருப்பை பார்த்தேன். அது என்னை மிகவும் கவர்ந்தது. 6 இன்ச் ஹீல்ஸ் கொண்ட அந்த செருப்பின் மீது எனக்கு தீராத ஆசை இருக்கிறது.

அந்த செருப்பின் விலை ஒரு லட்சம் ரூபாய் எப்படியாவது பணத்தை சேர்த்து வைத்து அதனை வாங்கி விட வேண்டும் என்று தற்போது வரை முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன்.

அதற்கான பணத்தையும் சேமித்துக் கொண்டிருக்கிறேன் என சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

வாய் பிளந்த ரசிகர்கள்..

இதனை கேட்டு ரசிகர்கள் ஒரு லட்சம் ரூபாய் இருந்தால் என்னுடைய ஒரு வருட குடும்பத் தேவையை நிறைவு செய்து கொள்வேன். ஆனால் நீங்கள் ஒரு லட்சம் ரூபாயில் செருப்பு வாங்குகிறேன் என்று கூறுகிறீர்களே என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் வயது சிறியதாக இருந்தாலும் உழைத்து சேமித்து வைத்து ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். அத்துடன் யாருடைய காசையும் அவர் ஏமாற்றவில்லை. அவருடைய சொந்த உழைப்பில் வாங்க நினைக்கிறார்.

அது அவருடைய உரிமை இதில் யாரும் அனிகா சுரேந்திரனை வசை பாடுவதற்கு இதில் ஒன்றும் கிடையாது என்று அவருக்கு ஆதரவாகவும் கூட கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. அத்தோடு ஒரு செருப்பின் விலை இவ்வளவா என்று அனிகா சுரேந்தரை பார்த்து ரசிகர்கள் வாய் பிளந்து விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version