“டாடா திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது கவின் இல்ல..” வேற யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..!

திரை உலகத்தை பொறுத்த வரை நினைப்பது அனைத்தும் முழுமையாக நடந்து விடாது. அந்த வகையில் டாடா திரைப்படம் வெளி வந்து மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றதோடு வசூலில் சாதனை புரிந்த படமாக மாறியது.

பெரிய பட்ஜெட் படங்கள் கூட திரை உலகில் இன்று பெரிய அளவு வசூலை தராத வேளையில் சின்ன பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் கிட் அடித்ததோடு ரசிகர்களின் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

டாடா திரைப்படம்..

திரைப்படத்தை பொறுத்த வரை கதைக்களம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று அந்த கதைக்களம் சிறப்பாக அமைந்துவிட்டால் அது லோ பட்ஜெட் படம் என்றாலும் மக்கள் விரும்பக்கூடிய வகையில் அமைந்து வசூலை அள்ளித்தரும்.

அந்த வகையில் குட் நைட், அயோத்தி, சித்தா, போர் தொழில், பார்க்கிங், 1947 போன்ற திரைப்படங்கள் கடந்த ஆண்டு மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் வசூலில் சாதனை புரிந்து மக்களின் பெரிய ஆதரவை பெற்றது.

அந்த வகையில் கவின் நடிப்பில் வெளிவந்த டாடா திரைப்படத்தை கணேஷ் கே பாபு இயக்கியிருந்தார். மேலும் இதில் கவினுக்கு ஜோடியாக அவர் நாதாஸ் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் நடிகர் கவினை நடிக்க வைக்க வேண்டும் என்று முதலில் நினைக்கவில்லை.

கவினுக்கு பதிலா இவர் நடிக்க இருந்தாரா..

மேலும் இயக்குனர் இந்த கதையை எழுதும் போது முதலில் ஹீரோவாக கற்பனை செய்து வைத்திருந்த நபர் யார் தெரியுமா? அவர் வேறு யாருமில்லை இளம் இசை அமைப்பாளரான அனிருத் தான். அனிருத் இந்த படத்தில் ஹீரோவாக நடித்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து தான் இந்த கதையை அவர் உருவாக்கி இருக்கிறார்.

ஆனால் இந்த படத்தின் கதையானது கவின் இடம் சொல்லப்பட்டு கவின் ஓகே செய்த பிறகு தான் டாடா படத்தை அவரை வைத்து பண்ண முடிவு செய்ததாக இயக்குனர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் புது முகங்களை வைத்து இயக்க வேண்டும் என்ற எண்ணத்தை இயக்குனர் கொண்டு இருந்ததால் தான் இந்த முடிவை எடுத்ததாகவும் ஆனால் தயாரிப்பாளர் படம் வியாபாரம் ஆகாது என்ற நோக்கத்தால் மக்களுக்கு நன்கு அறிமுகமான நடிகர் மற்றும் நடிகைகளை வைத்து திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் இந்த திரைப்படம் வெளி வந்து ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு சமீபத்திய பேட்டி ஒன்று இந்த தகவலை பகிர்ந்ததை அடுத்து அனைவரும் ஷாக் ஆகிவிட்டார்கள்.

மேலும் உண்மையில் இந்தப் படத்தில் அனிருத் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் ஒவ்வொருவரும் கற்பனை செய்து வருவதோடு நடிகர் புது முகங்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று எண்ணிய அந்த எண்ணத்தை பாராட்டி வருகிறார்கள்.

இவரைப் போல ஒவ்வொரு இயக்குனரும் புது முகங்களுக்கு வாய்ப்பை அளிக்கும் போது திரை உலகில் ஒரு மிகப்பெரிய போட்டியில் இளம் திறமையாளர்களும் கிடைப்பார்கள் என்ற விஷயத்தை தெளிவுபட ஒவ்வொருவரும் கூறி இருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam