வருஷமெல்லாம் வசந்தம் அனிதா ஹாசநந்தினி-யா இது..? – வாயடைத்து போன ரசிகர்கள்..!

அனிதா ஹாசநந்தினி, (Anita Hassanandani) தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்தார். ஆனால், இப்போதும் பிரபலமான நடிகையாக, பாலிவுட்டில் வலம் வருகிறார்.தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் பல படங்களில் அவர் நடித்திருக்கிறார். சினிமா நடிகையாக மட்டுமின்றி, டிவி சீரியல் அனிதா ஹசானந்தினி மிக பிரபலமானவராக இருக்கிறார். மக்கள் மத்தியில், சீரியலில் இவரது கேரக்டர் பேசும்படியாக அமைந்திருக்கிறது.

Anita Hassanandani

ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில், காவ்யாஞ்சலி என்ற சீரியலில் அஞ்சலி கேரக்டர், இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை, பாராட்டை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது.யே ைஹ முஹப்பதீன் என்ற சீரியலில் ஷாகுன் அரோரா என்ற கேரக்டரிலும் அனிதா ஹசானந்தினி மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார். மேலும், கலர்ஸ் தொலைக்காட்சியில் நாகினி 3 மற்றும் நாகினி 4 சீரியல்களில் விசாகா கன்னா கேரக்டர் இவருக்கு பெரிய புகழை பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Anita Hassanandani

அனிதா ஹசானந்தினி, மும்பையை சேர்ந்தவர். மஹாராஷ்டிராவில் பிறந்தவர். கடந்த 2013ல், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ரோஹித் ரெட்டியை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2021ல் ஆண் குழந்தை பிறந்தது. தங்கள் குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என பெயரிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில், கடந்த 2002ம் ஆண்டில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கிய சாமுராய் படத்தில், அனிதா ஹசானந்தினி அறிமுகமானார். இதில் விக்ரம் ஹீரோவாக நடித்திருந்தார். ஆக்ஷன் படமான இதில், கல்லூரி மாணவியாக சில காட்சிகளிலும், அதன்பின் நாசரின் மகளாகவும் இவர் நடித்திருந்தார். படத்தில், விக்ரமை காதலிக்கும் கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

Anita Hassanandani

அதைத் தொடர்ந்து, வருஷமெல்லாம் வசந்தம் என்ற படத்தில், பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஜோடியாக இவர் நடித்திருந்தார். இவரை காதலிக்கும் மனோஜ் பாடும் ‘எங்கே அந்த வெண்ணிலா’ என்ற பாடல், இந்த படம் ரிலீஸ் ஆன போது பிரபலமானது.

அடுத்து, எஸ்.ஏ சந்திரசேகரன் இயக்கிய படமான சுக்ரன் படத்தில், ரவி கிருஷ்ணாவின் காதலியாக இவர் நடித்திருப்பார். இதில், நடிகர் விஜய் இளம் காதலர்களான இவர்களை காப்பாற்றும் வக்கீல் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த மூன்று படங்களுமே, ஓரளவு வெற்றிப்படமாக அமைந்ததால், ரசிகர்களின் மனதில் நல்ல நடிகையாக, அனிதா ஹசானந்தினிக்கு இடம் கிடைத்தது. ஆனால், அடுத்தடுத்து தமிழில் பட வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை.

Anita Hassanandani

இளமையான அழகும், பொலிவான தோற்றமும் கொண்ட அனிதா ஹசானந்தினிக்கு, தமிழில் இன்னும் பட வாய்ப்புகள் கிடைத்திருந்தால் அவர் இன்றும் தமிழ் படங்களில் நடித்துக்கொண்டு இருந்திருப்பார். ஆனால், தமிழ் படங்களில் வாய்ப்பு இல்லாவிட்டாலும், இந்தி மற்றும் கன்னட படங்களில் நிறைய வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். அதையும் தொடர்ந்து, டிவி சீரியல்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்தும், ரசிகர்களின் அன்பை, அபிமானத்தை பெற்றிருக்கிறார்.

Anita Hassanandani

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் அனிதா ஹசானந்தினி, அடிக்கடி தனது படங்களை அப்டேட் செய்து வருகிறார். குடும்ப படங்களை, பதிவிடுகிறார். மாடர்ன் டிரஸ், கிளாமர் டிரஸ் அணிந்த புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்து, ரசிகர்களை குஷிப்படுத்துகிறார். ரசிகர்களும் லைக்குகளை அள்ளி வழங்கி வருகின்றனர்.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …