நடிகர் விஜய் செயலை நக்கல் செய்த அனிதா சம்பத்..! கள்ளச்சாராய விவகாரத்தில் வெடித்த சர்ச்சை.. விளாசும் ரசிகர்கள்..!

கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதத்திற்கு புறம்பாக கள்ளச்சாராயம் காய்ச்சி திருட்டுத்தனமாக விற்கப்பட்டு வந்துள்ளது.

இந்த கள்ளச்சாராயத்தை வாங்கி அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி சேலம் புதுச்சேரி விழுப்புரம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அவர்கள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார்கள் .

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவாகரம்:

கடந்த 20ஆம் தேதி மாலை வரை கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அரசு வட்டாரத்தில் இருந்து அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியுள்ளது.

ஒட்டுமொத்த தமிழகத்தை உருக்குலைய செய்திருக்கிறது. இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி அடுத்த கோமதி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் நடைபெற்றுள்ளது.

இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாகபுரம், மாதவச்சேரி பகுதிகளில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த கள்ளச்சாராயத்தை அருந்தியவர்கள் உடல் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் .

74 பலி… 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு:

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்த நபர்கள் தொடர்ந்து உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் மது அருந்திய பலருக்கும் வயிற்றுப்போக்கு, கை, கால் மரத்து போதல் உள்ளிட்ட வித்தியாசமான பிரச்சனைகள் இருந்துள்ளது.

இதனால் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகள் செய்தவர்கள் தொடர்பான விவரம் வெளியாகிறது. அவர் மிகவும் கவலைக்கிடமாக இருந்துள்ளனர்.

இதனால் பாண்டிச்சேரி, சேலம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவுக்காக அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தனர்.

கிட்டத்தட்ட 74 பேர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும், பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க கூடும் என கூறப்படுவதால் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள் தமிழக மக்கள்.

சாராயத்தில் “மெத்தனால் திரவம்” கலப்பு:

மது அருந்தியவர்கள் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் அனைவரும் மெத்தனால் எனும் திரவத்தை அருந்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனை விற்பனை செய்த கன்னுக்குட்டி என்னும் கோவிந்தராஜ் மற்றும் அவரது தம்பியான தாமோதரன் ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணையில் இருந்து வருகிறார்கள்.

இந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி எஸ்பி உள்ளிட்ட 10 காவல்துறை அதிகாரிகள் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள் .

இது தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக நல அக்கறை உள்ளவர்கள் மற்றும் நடிகர் விஜய் உள்ளிட்டோர் பெரும் கண்டனங்களை தெரிவித்துவந்தனர்.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வந்தனர். அந்த வகையில் இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்டு நடிகர் விஜய் பதிவிட்டு இருப்பதாவது,

அரசின் அலட்சத்திற்கு விஜய் கண்டனம்:

“கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.

இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என விஜய் பதிவிட்டிருந்தார்.

இப்படி பொதுமக்கள் அனைவரும் அரசின் கவனக்குறைவினாலும் அலட்சியத்தாலும் இப்படி நடந்துள்ளது என கொந்தளித்து வரும் வேளையில் நடிகை அனிதா சம்பத் இந்த விவகாரம் குறித்து ஏளனமாக தனது கருத்தை பதிவிட்டிருப்பது ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் கடுங்கோபத்திற்கு உள்ளாகியுள்ளது.

நக்கல் அடித்த அனிதா சம்பத்:

ஆம், நடிகை அனிதா சம்பத் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து ஏளனமாக மக்கள் செய்யும் வகையில் கருத்து பதிவு செய்திருப்பது இணைய வாசிகள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அனிதா சம்பத்தின் கூற்றுப்படி… “சாராயம் குடிக்கும் போதை ஆசாமிகளுக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கு.. என்று கூற வருகிறார் .என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், அந்த கலாச்சாராயம் புழக்கத்தில் இருந்ததை கண்டு கொள்ளாமல் விட்ட ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தை பற்றி அனிதா சம்பத் கவலைப்படுவதாக தெரியவில்லை.

நடிகர் விஜய் நேற்று கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி மற்றும் உதவிகளை செய்தார்.

நலம் விசாரித்த நடிகர் விஜய் தன்னுடைய பிட்டர் பக்கத்தில் அரசின் நிர்வாகத் தோல்வி குறித்து தன்னுடைய கட்டமான கருத்தை பதிவு செய்திருந்தார்.

இதனை தொடர்ந்து நடிகை அனிதா சம்பத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாட்டுக்காக போராட பார்டருக்கு போனபோ டெரரிஸ்ட் நேருக்கு நேர் தாக்கும் போது நெஞ்சுல குண்டடி பட்டு ஹாஸ்பிடல்ல கவலைக்கிடமா இருக்காங்க பாவம் என கூறியிருக்கிறார்

அதே நேரத்தில் கள்ளச்சாராயத்தினால் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை ஏளனமாகவும் கிண்டல் அடிக்கும் தொனியிலும் பேசி இருப்பது இணையவாசிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version