எங்க வீட்ல இது இல்ல.. சொன்ன யாரும் நம்ப மாட்டாங்க.. அனிதா சம்பத் சொல்வதை கேட்டீங்களா..?

தமிழக மக்கள் மனதில் எவர்கீன் இடத்தை பிடித்திருக்கும் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான அனிதா சம்பத் தற்போது திரைப்படங்களில் நடிக்க கூடிய நடிகை என்ற அந்தஸ்தையும் பெற்றிருக்கிறார்.

அந்த வகையில் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சீரியல்களிலும் தலை காட்டி வரும் இவர் சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை சிந்திக்க வைப்பார்.

எங்க வீட்டில இது இல்ல..

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில கருத்துக்களை வெளியிட்டு வரக்கூடிய செய்தி வாசிப்பாளராக இருந்து சம்பாதித்த பெயரை விட விஜய் டிவியில் நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

மேலும் இவர் ஜீ தமிழ், விஜய் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து விட்டார்.

தற்போது தனது கணவரோடு இணைந்து youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் அவ்வப்போது புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு விடுவார்.

இவர் வெளியிடுகின்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர்களை காத்திருக்கும் என்று சொன்னால் மிகையாகாது.

சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க..

சமூக வலைதளங்கள் மட்டுமல்லாமல் அடிக்கடி பேட்டிகளையும் அளிக்கக்கூடிய இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சொன்னால் யாரும் நம்ப மாட்டீங்க..

 எங்கள் வீட்டில் சாப்பிடுவதற்கு இரண்டு தட்டங்கள் மட்டும் தான் இருக்கும் ஒன்றை கழுவி பின் தான் அதை நாங்கள் பயன்படுத்துவோம் என கூறியிருக்கிறார்.

மேலும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து வந்த சமயத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி உடைந்து விட்டது. இதனை அடுத்து இவர்கள் கண்ணாடியே வாங்கவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் கல்லூரிக்கு செல்லும் போது முகத்திற்கு பவுடர் மற்றும் நெற்றியில் பொட்டு வைத்துச் செல்ல கையளவு உள்ள கண்ணாடியில் தான் பார்த்து செல்வதாக சொல்லியவர் தனது முழு உடையையும் பார்க்கக் கூடிய அளவு தங்கள் வீட்டில் கண்ணாடி கிடையாது என்ற அதிர்ச்சிகரமான தகவலை சொல்லி இருக்கிறார். 

அனிதா சம்பத் சொன்ன விஷயத்தை கேட்டீங்களா?

மேலும் செய்தி வாசிப்பாளராக மாறுவதற்கு முன்பு டியூஷன் எடுத்து வந்திருக்கும் இவர் அதன் மூலம் கிடைத்த சம்பளத்தை கொண்டு முதல் முதலாக கண்ணாடியை தான் வாங்கியதாக சொல்லி இருக்கிறார்.

அத்துடன் அது மாதிரி முகம் பார்க்கும் கண்ணாடி இல்லாமல் மூன்று நான்கு மாதங்கள் இருந்ததாக வெளிப்படையாக பேசி இருக்கும் அனிதா சம்பத்தின் பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி விடுகிறது.

மேலும் இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான கடும் முயற்சிகளில் ஈடுபட்டு தான் அனிதா சம்பத் இந்த அளவு உயர்ந்து இருக்கிறார் என்றால் இவரை கூட ஒரு ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version