“பீரியட்ஸ் கரையோடு இதை பண்ணேன்.. ஆனால்.. அந்த இடத்தில்…” – போட்டு உடைத்த அனிதா சம்பத்..!

நான் பீரியட்ஸ் கரையோடு இதை செய்தேன் என்று நடிகை அனிதா சம்பத் பேசியுள்ள சில விஷயங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சமீபத்தில் தன்னுடைய புதிய வீட்டுக்கு ஆறு மாதம் பிறந்தநாள் என்று உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் அனிதா சம்பத்.

அதில் இது என்னுடைய வீடு இது..! அனிதா சம்பத்தின் வீடு இது..! இந்த பயணம் அவ்வளவு எளிதாக இல்லை. நான் விடியற்காலையில் எழுந்து வாக்கிங் செல்லும் பொழுது வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டே இருப்பார்கள்.

நான் வேலையை முடித்துவிட்டு தாமதமாக வரும் பொழுது வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். அம்மா அப்பாவுடன் நேரம் செலவிட முடியவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கும்.

சில நேரம் அந்தக் கவலை சோகமாகவும் மாறும் ஆனாலும் சின்ன நிகழ்ச்சி பெரிய நிகழ்ச்சி என எதையும் பார்க்காமல் நேரம் காலம் பார்க்காமல் நம் குடும்பத்தை நாம் தான் அழைத்துக் கொண்டு வர வேண்டுமென்று உண்மையான நேர்மையான வழியில் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு உழைத்துக் கொண்டே இருந்தேன்.

எனக்கு பக்கபலமாக இருந்த நண்பர்கள் மற்றும் என்னுடைய தொலைபேசி மற்றும் என்னுடைய காதலன். எங்களுடைய காதல் மிகவும் முதிர்ச்சியான காதல். கொஞ்சி சினுங்கும் வழக்கமான ரொமாண்டிக் காதல் எல்லாம் கிடையாது.

நாங்கள் 2 பேருமே மீடியா துறையை சேர்ந்தவர்கள். ஆனால்., வேறு வேறு வேலைகள். எங்கள் குடும்பம் எங்க முன்னேற்றம் எங்கள் வேலை எங்கள் கனவுகள் இதை பற்றி மட்டுமே அதிகம் பேசிக்கொண்டு இருந்தோம்.

ஒரு முறை நாப்கின் வாங்க காசு இல்லாமல் இரண்டு கிலோமீட்டர் பீரியட்ஸ் கரையுடன் நடந்து சென்றேன். ஆனால், டியூஷன் எடுக்கும் வீட்டில் என்னுடைய நாப்கினை வாங்கி மாற்றினேன். தற்போதும் என் நினைவில் அது இருக்கிறது என்று தன்னுடைய கடினமான காலங்கள் குறித்த நினைவுகளை போட்டு உடைத்திருக்கிறார். மேலும், நான் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் என்று பேசியிருக்கிறார் அனிதா சம்பத்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version