குளியல் தொட்டியில் மணக்க மணக்க குளியல்.. அனிதா சம்பத் வெளியிட்ட குளுகுளு போட்டோஸ்..!

ரோஜாப்பூ, ரோஜா பூ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது ரோஜா பூக்கள் நிறைந்த பாத் டப்பில் கோடைக்கு ஏற்ற குளியலை போட்டு இருக்கும் அனிதா சம்பத்தின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் வைரலாகி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 4-இல் கலந்து கொண்டு ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்து இருக்கும் அனிதா சம்பத் மிக சிறந்த தொகுப்பாளினியாக திகழ்ந்தவர்.

அனிதா சம்பத்..

இவர் பிக் பாஸ் வீட்டில் விளையாடிய சமயத்தில் தான் இவரது தந்தையின் இறப்பு நிகழ்ந்தது. அதனை மிகவும் வேதனையோடு வெளிப்படுத்திய இவர் அதன் பிறகு எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.

மேலும் இவர் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிகள் பங்கேற்று முதல் பரிசை வென்றவர். அடுத்தடுத்து படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து திரைப்படங்களிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

மேலும் 2018-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த காலா திரைப்படத்திலும் தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த சர்க்கார் படத்திலும் 2.0 என்ற படத்தில் செய்தி வாசிப்பாளராகவே நடித்திருந்தார்.

அத்தோடு 2019-ஆம் ஆண்டு கப்பன், ஆதித்ய வர்மா, அவசரம், தர்பார் போன்ற படங்களில் நடித்த இவர் 2020-ல் இரும்பு மனிதன், டேனி போன்ற படங்களில் நடித்த வகையில் நல்ல ரீச் கிடைத்தது.

இவர் பாலிமர் செய்தி நியூஸ்7 தமிழ், சன் நியூஸ், வணக்கம் தமிழா போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணி புரிந்து இருக்கிறார்.

குளியல் தொட்டியில் மணக்க மணக்க..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து ரசிகர்களை ஈர்க்கக்கூடிய வகையில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளத்தில் நடிகை அனிதா சம்பத் ஸ்பா ஒன்றில் பாத் டப்பில் பழங்கள் மற்றும் ரோஜா பூக்களை கொட்டி குளியல் போடும் காட்சிகள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.

இதைப் பார்த்து அசந்து இருக்கும் ரசிகர்கள் அனைவரும் மணக்க மணக்க குளியல் தொட்டியில் குளியல் போட்டிருக்கும் அனிதா சம்பத்தை பார்த்து ஏக்க பெரு மூச்சு விட்டிருக்கிறார்கள்.

குளுகுளு போட்டோஸ்..

கடுமையான வெப்ப அலைகளால் இந்த ஆண்டு வெப்பநிலை அதிகரித்து இருக்கக்கூடிய சமயத்தில் கோடையில் கொதிக்கும் வெப்பத்தை குறைத்துக் கொள்ள குளியல் தொட்டியில் இப்படி ஒரு குளியல் போட்டு குளுகுளு போட்டோஸை வெளியிட்டு இருக்கும் அனிதா சம்பத்தை பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.

மேலும் அனிதா சம்பத்தை போல இது போன்ற குளியலை போடுவதின் மூலம் உடல் வெப்பத்தை ஈசியாக தனித்து விடலாம் என்பது போல ரசிகர்கள் அனைவரும் அவர்கள் வீடுகளிலும் ரோஜா பூக்கள் கொட்டிய நீரில் குளிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்நிலையில் இவரது புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த குளு குளு போட்டோஸ்க்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு இந்த விஷயத்தை வைரலாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version