உங்க பாத்ரூம்ல இதை பண்ணுங்க.. கேள்வி கேட்ட ரசிகருக்கு அனிதா சம்பத் கொடுத்த பதில்..!

ஆரம்ப நாட்களில் பாலிமர் டிவி, நியூஸ் 7, தமிழன் போன்ற தொலைக்காட்சிகளில் தொகுப்பாளியாக பணியாற்றிய அனிதா சம்பத் சன் நெட்வொர்க்கிலும் தொகுப்பாளினியாக பணியாற்றியதோடு சில தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து 2019-ஆம் ஆண்டு தனது காதலன் பிரபாகரனுடன் திருமணம் செய்து கொண்ட இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரைகளிலும் பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

நடிகை அனிதா சம்பத்..

இந்நிலையில் நடிகை அனிதா சம்பத் 2018-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த காலா திரைப்படத்தில் செய்தி வாசிப்பாளராக நடித்திருப்பார். அதே போல் அதே ஆண்டு வெளி வந்த சர்க்கார் படத்திலும் அதே ரோலை செய்து அனைவரையும் அசத்தினார்.

இதனை அடுத்து 2019-ஆம் ஆண்டு கப்பன், ஆதித்ய வர்மா போன்ற படங்களில் நடித்த இவர் அவசரம் எனும் வெப் சீரியஸில் நடித்திருக்கிறார். இந்த சீரியஸில் மீரா கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

மேலும் 2020-இல் தர்பார், இரும்பு மனிதன், டேனி போன்ற படங்களில் நடித்த இவர் திரைப்படங்களில் அதிக அளவு நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

பாத்ரூம்ல இதை பண்ணுங்க..

இவர் விஜய் டிவியில் நடந்த பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதை அடுத்து இவரது ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.

சமூக வலைதளங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தடாலடியாக பதிலை அளித்து வரும் இவர் அடிக்கடி தன் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்களையும் வெளியிடுவார்.

இதனை அடுத்து பல பேட்டிகளில் பங்கேற்க கூடிய இவர் அண்மை பேட்டியில் தனது அப்பா இறந்த விஷயம் குறித்து மனம் திறந்து பேசி இருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

இதனால் தான் ஓர் அதிர்ஷ்டம் இல்லாத மகள் என்று அடிக்கடி குறிப்பிடுவதாக கூறி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார்.

அனிதா சம்பத் கொடுத்த பதில்..

அந்த வகையில் தற்போது இவர் பல்வேறு வகையான புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட கூடிய நடிகை அனிதா சம்பத் இடம் ரசிகர் ஒருவர் எல்லோரும் பாத்ரூம் டூர் செய்கிறார்கள். நீங்களும் உங்கள் பாத்ரூம் டூரை போடுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

இந்நிலையில் தனது ஆசையை வெளிப்படுத்தி இருக்கும் ரசிகரை மகிழ்ச்சி படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகை அனிதா சம்பத் தன்னுடைய பாத்ரூமில் ஒரு பக்கெட் ஒரு மக் மட்டும் தான் இருக்கு என்று சொல்லி பதில் அளித்திருக்கிறார்.

இந்த இரண்டு விஷயத்தையும் காட்ட டூர் அவசியம் இல்லை என்று சொல்லாமல் சொல்லி இருக்கும் அனிதா சம்பத்தின் பதிலை கேட்ட ரசிகர்கள் அனைவரும் சரியான பதிலை தான் தந்திருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் ஒரு பக்கெட் ஒரு மக் என்று சிறப்பாக தனது பாத்ரூம் டூரை முடித்து விட்ட அனிதா சம்பத்தின் பதிலை அனைவரும் கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

அத்தோடு இந்த விஷயத்தை தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் பேசும் பொருளாக இந்த விஷயம் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version