இன்னும் குழந்தை இல்ல.. மற்ற குழந்தைகளை பார்க்கும் போது இப்படி தோணும்.. அனிதா சம்பத் கண்ணீர்..!

முன்னணி டிவி சேனல்களில் செய்திவாசிப்பாளராக இருந்தவர் அனிதா சம்பத். சில ஆண்டுகளுக்கு முன், விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 4ல் பெண் போட்டியாளராக பங்கேற்றார்.

அனிதா சம்பத்

சர்க்கார், கப்பன் போன்ற படங்களில் செய்தியாளராக சின்ன சின்ன கேரக்டர்களில் அனிதா சம்பத் நடித்திருக்கிறார். காலா, 2.ஓ, ஆதித்ய வர்மா இரும்பு மனிதன் போன்ற படங்களிலும் சின்ன சின்ன காட்சிகளில் செய்தியாளராக அவர் தோன்றியிருக்கிறார்.

மீடியா துறையில் இருந்துவரும் அனிதா சம்பத் தொடர்ந்து அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்.

மேலும் அடிக்கடி நேர்காணல்களிலும் பங்கேற்று வருகிறார். அனிதா சம்பத்தை பொருத்தவரை, ஏழ்மையான குடும்பத்தில் இருந்து மீடியாவுக்குள் வந்தவர்.

குடும்ப செலவுகளையும்

அவரது பேட்டி ஒன்றில், நாளைக்கு டிவி சேனலில் சேர்ந்த புதிதில், தினமும் 4 முறை செய்திகள் வாசிக்க அமர வேண்டும். அப்போது ஒவ்வொரு முறையும், ஒரு டிரஸ் அணிய வேண்டும். அப்போதுதான் நான் பணிக்கு வந்திருக்கிறேன். என் குடும்ப செலவுகளையும் கவனிக்க வேண்டும்.

அதனால் நான் 100 ரூபாய் குர்தியை வாங்கி தான் பயன்படுத்துவேன். அந்த டிரஸ்தான் என்னுடைய அப்போதைய வருமானத்துக்கு வாங்கி பயன்படுத்த முடிந்தது என்று உருக்கமாக, அதே நேரத்தில் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்.

திருமணமாகி 4 ஆண்டுகள்

சமீபத்தில் ஒரு நேர்காணலில், அனிதா சம்பத் தன் கணவருடன் பங்கேற்றார். அப்போது அவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இன்னும் இல்லாதது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: 20 ஆண்டுகால போராட்டம்.. நிம்மதி பெருமூச்சு விடும் கவுண்டமணி..!

அதற்கு அனிதா சம்பத் கூறியதாவது, அதிர்ஷ்டவசமா என்னுடைய நண்பர்கள் வட்டத்துல அப்படி யாரும் இல்லை. எப்ப குழந்தை, எப்ப குழந்தை அப்படீன்னு யாருமே எங்களை கேட்கறது இல்லை.

நீங்கள் சீக்கிரம் காட்டுங்க

அந்த மாதிரி யாரும் கேட்கறது கிடையாது. நீங்கள் சீக்கிரம் காட்டுங்க அப்படீம்பாங்க. எங்க சர்க்கிளில் எல்லாமே பக்குவப்பட்ட மனுஷங்களா இருக்காங்க.

சில நாட்களுக்கு முன்னாடி வேலூர் போயிருந்தோம். அங்க ஒரு குட்டிப்பாப்பா இருந்தது. அதை பார்த்ததில் இருந்து ஒரு மாதிரி இருந்துச்சு. கல்யாணமாகி 4 வருஷம் ஆச்சு. இப்படி பாப்பா ஒண்ணு இருந்தால், அது 3 வயசு இருக்குமே அப்படீன்னு தோணும்.

இதையும் படியுங்கள்: “நம்ம மைண்டு அங்க போகுதே…” நைட் பார்ட்டியில் அனசுயா பரத்வாஜ் விவகாரமான போஸ்..!

பீல் பண்ணினேன்

ஆனா இந்த பாப்பாவுக்கு ஒரு வயசுதான் ஆச்சு. ஆனா ஆசையா இருந்துச்சு. இந்த மாதிரி நமக்கு இருந்திருக்குமுன்னு பீல் பண்ணினேன், என்று கூறியிருக்கிறார் அனிதா சம்பத்.

குழந்தை இல்லை

திருமணமாகி நான்கு ஆண்டுகளாகியும் இன்னும் குழந்தை இல்ல.. மற்ற குழந்தைகளை பார்க்கும் போது, நமக்கு குழந்தை இருந்தா இப்படிதான் இருக்கும் என்று மனதில் தோணும் என்று அனிதா சம்பத் கண்ணீர் விடாத குறையாத வருத்தமுடன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version