“இதை எதிர்த்தா தே*** பட்டம் தேடி வரும்..” அனிதா சம்பத் சொல்வதை கேட்டீங்களா..?

சன் டிவியில் செய்தி வாசிப்பாளினியாக அறிமுகமாகி ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களின் மனதிலும் குடி புகுந்தவர் அனிதா சம்பத்.

குறிப்பாக இவர் செய்தி வாசிக்கிறார் என்றால் காலையிலே டிவி போட்டு டிவி முன் அமர்ந்த ஏராளமான இளைஞர்கள் உண்டு.

இளைஞர்களை கவர்ந்த அனிதா சம்பத்:

பார்ப்பதற்கு பவ்யமான அழகில் க்யூட்டான தோற்றத்தில் அனிதா சம்பத் எல்லோரது மனதையும் வெகுவாக கவர்ந்தார்.

இதன் மூலம் அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. திரைப்படங்களில் கூட செய்தி வாசிப்பாளினியாக நடித்து மக்களுக்கு பரிச்சயமானார்.

மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் இவரை போற்றப்பட ஓவர் நைட் பிரபலமாகிவிட்டார் அனிதா சம்பத்.

இதையும் படியுங்கள்: சூர்யா குறித்து ரசிகை எழுப்பிய கேள்வி.. உச்ச கட்ட கோபத்தில் ஜோதிகா கொடுத்த பதிலடி..

அதன் மூலம் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒரு பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வாய்ப்பு கிடைத்தது.

பிக்பாசில் அனிதா சம்பத்:

அந்த நிகழ்ச்சியில் அனிதா சம்பத் மிகப்பெரிய அளவில் பிரபலமானதோடு கூடவே நிறைய எமோஷனலாக பேசியும்… அவரின் ஒருசில நடவடிக்கைகள் மக்களுக்கு பிடிக்காமல் போனது.

பிக் பாஸில் மக்களின் வெறுப்புக்கு ஆளாகி இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு அனிதா சம்பத் தொடர்ந்து திரைப்படங்களிலும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

இதனிடையே அவர் தன்னுடன் வேலை பார்த்து வந்த பிரபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து இப்போது வாழ்க்கையில் முன்னேறி பல சாதனை பல கனவுகளை நிறைவேற்றி வருகிறார்கள்.

தற்போது அனிதா சம்பத் கடந்த மகளிர் தினத்தன்று பதிவிட்ட பதிவு தான் தற்போது சமூக வலைதளங்கள் முழுக்க வைரலாகி வருகிறது

வைரலான அனிதாவின் பதிவு:

அதில் அவர் கூறி இருப்பதாவது : சொல்லவே மனசு வரல.. இருந்தாலும் சொல்லி வைக்கிறேன். “மகளிர் தின வாழ்த்துகள்”.

இதையும் படியுங்கள்: கட்டை நடிகருடன் ரகசிய குடும்பம் நடத்தி.. வயிறு வீங்கிய கடவுள் நடிகை.. வெடித்த சிக்கல்..

ஏன்னா இதையும் சொல்லிக்காம கொண்டாடிக்காம போய்ட்டோம்னா இருக்குற கொஞ்ச நஞ்ச குவியமும் இந்த பாழாபோன genderக்கு கிடைக்காம போய்டுமோனு ஒரு பயம்தான்.

1 வயசுனாலும் விடுறதில்ல; 9 வயசுனாலும் விடுறதில்ல; பொண்ணா இருந்தாலும்; பாட்டியா இருந்தாலும்; ஏன், நம்ம ஊர நம்பி வர foreignerனாலும் விடுறதில்ல.

அன்னக்கி கள்ளிபால குடுத்து வீசுனீங்க. இன்னக்கி கற்பழிச்சி ஆத்துலயும் குளத்துலயும் சாக்கடையிலயும் வீசுரீங்க.

குழந்தை பிறப்புக்காக படைக்கப்பட்ட அந்த ஒரு துவாரத்த காப்பாத்திகிறதுலயே பொண்ணுங்க வாழ்க்கை போய்டுது.

பாக்குற படிக்குற ஒரு ஒரு செய்தியும் வெளிய வர நினைக்கிற மத்த பொண்ணுங்களையும் வீட்டுக்குள்ள அடைச்சிடுது.

இன்னொரு பக்கம்.. நிறைய சிரிக்காத, நிறைய அழுவாத, நிறைய பேசாதானு அவளுக்கு புடிச்சத செய்ய உடாம அழுத்தி அழுத்தி வேடிக்க பாக்க வேண்டியது.

தேடி வரும் தே* பட்டம்:

Social mediaல முகத்தை காட்டிட்டோம்னா சந்திக்கிற digital rape மற்றொரு பக்கம். இத எதிர்த்து பேசிட்டோம்னா தேடி வரும் தே* பட்டம்.

அப்படியே இதையெல்லாம் மீறி வேலைக்கு போய்ட்டோம்னா, என் மனைவி வீட்டையும் பாத்துக்குறா வேலையும் பாத்துக்குறானு glorify பண்ணி பண்ணி மொத்ததையும் நம்ம தலையிலையே கட்டுறது.

இது பத்தாதுனு வரதட்சனையா பணம் நகைநட்டு மட்டு மயிறு தொடப்பக்கட்டனு மாமியார் நாத்தனார் போல மத்த பெண்களாலயே பட்ற கஷ்டம்.

இதையும் படியுங்கள்: நிவேதா பெத்துராஜ் உதயநிதி விவகாரம்..கிருத்திகா உதயநிதி கொடுத்த பதிலை பாத்தீங்களா..?

அவன் குடுக்குற புள்ளைக்கும் அம்மா வீடே செலவு பண்ணனும் வேற. (ஆனா அவங்க வீட்டு வாரிசுனு கொஞ்சி கொஞ்சி, தாத்தா பெயர கேட்டாலும் செலவு பண்ண நம்ம அப்பா பெயர முதல்ல சொல்லாம அவங்க அப்பா பெயரதான் சொல்லும்.)

பொண்ணுங்க அப்படி என்ன சாபம் தான் வாங்கிட்டு வந்தமோ தெரில..நமக்காக நம்ம voice out பண்ணிக்கிட்டா கூட அத வெறுக்க அவ்ளோ பெரிய கூட்டம்.

ஆண்கள் வலியெல்லாம் நல்லாவே தெரியும், நாங்க முடக்குற சமூகத்த பத்தி மட்டும்தான் பேசுறோம்னு எப்படி புரியவைக்கிறது. அடுத்த பலிகடா உங்க பெண் குழந்தையாகவும் இருக்கலாம் ங்குறதுதான் எங்க கவல.

பெண்கள தெய்வமாலாம் வணங்க வேணாம். மதிக்க கூட வேணாம். அவங்கள அவங்களா இருக்க விட்டாலே போதும்.

ஜெய்க்க முடியாமல் திண்டாடும் பெண்கள்:

ஜெய்ச்ச மகளிர மட்டுமே கொண்டாடாம, ஜெய்க்க முடியாம திண்டாடுற, போராடுற மகளிரையும் சேர்த்து கொண்டாடுவோம்.

சொல்லும் போதே சொல்லவிடாம தொண்டை கணக்குது. இருந்தாலும் மகளிர் தின வாழ்த்துக்கள்” என பதிவிட்டிருந்தார். இந்த பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version