அறிமுகமான முதலில் ஒரு நாளைக்கு 4 முறை இதை பண்ணனும்.. அனுபவம் பகிர்ந்த அனிதா சம்பத்..

பெண்களை பொருத்தவரை ஆடைகள், நகைகள் அணிவதில்தான் அதிக ஆர்வமும், விருப்பமும் காட்டுவார்கள். அதே நேரத்தில் குடும்பத்தில் வறுமை இருந்தால் அந்த ஆசைகளை கூட நிராகரித்து விட்டு கிடைத்த ஆடைகளை மட்டுமே அணிந்துக் கொள்வார்கள்.

ஆனால் ஒரு சில பெண்கள், இப்படிப்பட்ட வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக எந்தவிதமான வாழ்க்கை வாழவும் தயாராகி விடுகிறார்கள். சினிமா நடிகைகள் பலரும் வசதியான வாழ்க்கை, சினிமா வாய்ப்புக்காக தன்னிலை மறந்த வாழ்க்கைக்கு தயாராகி விடுகின்றனர்.

ஆனால் ஒரு சிலர், வறுமை நிலைக்கு பயந்து விடாதே, திறமை இருக்குது மறந்து விடாதே என்ற பாடல் வரிகளை மனதில் வைத்து வாழ்க்கையில் வறுமையை உழைத்து சம்பாதித்து விரட்டுகின்றனர்.

அனிதா சம்பத்

அப்படி தனது வாழ்க்கையில் நேர்ந்த ஒரு அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்து இருக்கிறார் அனிதா சம்பத். இவர் செய்தி வாசிப்பாளராக சில முன்னணி சேனல்களில் பணிசெய்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன், விஜய்டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார்.

இதையும் படியுங்கள்: சூர்யாவுடன் நான் இருப்பது போன்ற புகைப்படம்.. ஜோதிகாவை பார்த்துட்டு எனக்கு பேச்சே வரல.. சாய்பல்லவி ஓப்பன் டாக்..

செய்தி வாசிப்பாளர்

பல படங்களில் செய்தி வாசிப்பாளராக, செய்தியாளராக மைக் பிடித்த காட்சிகளில் நடித்தவர் அனிதா சம்பத் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கணீரென்ற குரல் வளமும், தமிழை சுத்தமாக உச்சரிக்கிற விதமும் இவரை நல்ல ஒரு செய்தி வாசிப்பாளராக அடையாளம் காட்டியிருக்கிறது.

இதுகுறித்து ஒரு நேர்காணலில் அனிதா சம்பத் கூறியதாவது,

முதலில் நான் ஆடை அணிவதில் அதிக அக்கறை காட்டாமல் இருப்பேன். சரியாகவே டிரஸ் பண்ண மாட்டேன். நான் ஒரு சேனலில் முதலில் இருந்தேன். அப்போ தி நகர்ல போனா 100 ரூபாய்க்கு குர்தி கிடைக்கும். அந்த குர்தி தான் வாங்குவேன்.

ஒரு நாளைக்கு நாலு நியூஸ்

ஏன்னா, அந்த சேனலில் ஒரு நாளைக்கு நாலு நியூஸ் படிக்கணும். நாலு நியூஸ்க்கும் நாலு டிரஸ் போடச் சொல்லுவாங்க. வேற வேற நாலு டிரஸ் போடணும்பாங்க. இப்படியே நான் 30 நாளும் நான் படிக்கறேன்.

அப்படி 30 நாளும் நாலு நாலு டிரஸ் அப்படீன்னா, நான் இப்போதான் காலேஜ் முடிச்சிட்டு வந்திருக்கேன். இப்பதான் வேலைக்கு சேர்ந்திருக்கேன். இந்த சம்பளம் வந்தா தான் என் பேமிலிக்கே சப்போர்ட் பண்ண முடியும்.

இதையும் படியுங்கள்: எலும்பே உடஞ்சி போச்சு.. அந்த இடத்தில் ஆக்ரோஷமாக தாக்கிய நடிகர்.. ஓப்பனாக கூறிய வரலட்சுமி சரத்குமார்..!

100 ரூபா டிரஸ்தான் வாங்குவேன்

அதுவே வேலையில் ஜாயிண்ட் பண்ணின உடனே இதெல்லாம் எப்படி வாங்க முடியும். அதனால் 100 ரூபா டிரஸ்தான் வாங்குவேன். வீட்ல இருந்து வரும்போதே போட்டுட்டு வந்துடுவேன்.

அப்போ, கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து வேலை பார்க்கறவங்களை காட்டி இவங்களை மாதிரி நீங்க டிரஸ் பண்ணுங்க, ஏன் நீங்க சரியாவே டிரஸ் பண்ண மாட்டேங்கறீங்கன்னு என்னை கேப்பாங்க.

ஆனா அவங்க சொன்ன மாதிரி எல்லாம் என்னால் டிரஸ் பண்ண முடியலை என்று வெளிப்படையாக அதில் கூறியிருக்கிறார் அனிதா சம்பத்.

செய்தி வாசிப்பாளராக அறிமுகமான முதலில் ஒரு நாளைக்கு 4 முறை டிரஸ் பண்ணனும், வறுமையான நாட்களில் அது முடியலை என்று தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து பகிர்ந்திருக்கிறார் அனிதா சம்பத்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version