Site icon Tamizhakam

இப்படியும் பணம் சம்பாதிக்கனுமா.. கணவருடன் அனிதா சம்பத் செய்த வேலை.. வச்சி செய்யும் நெட்டிசன்ஸ்..

சின்னத்திரை சேனல்களில் செய்தி வாசிப்பாளராக ஆரம்ப நாட்களில் பணியாற்றி அதன் அடுத்து பெரிய திரையில் சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களை செய்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருக்கும் அனிதா சம்பத் தற்போது செய்திருக்கும் செயலால் ரசிகர்கள் அனைவரும் கடுப்பாகி விட்டார்கள்.

இதையும் படிங்க: அப்பா சிவாஜியை கலாய்க்குறீங்களா..? திட்டிய நடிகர் பிரபு.. எம்.எஸ்.பாஸ்கர் கொடுத்த நச் பதிலடி..

அனிதா சம்பத் ஆரம்ப நாட்களில் நியூஸ் 7, பாலிமர் போன்ற சேனல்களில் வேலை பார்த்த பிறகு சன் டிவியில் பணியில் சேர்ந்தார். இதனை அடுத்து சீரியல் களிலும் தலைகாட்டிய இவர் சில திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராகவே நடித்திருக்கிறார்.

அனிதா சம்பத்..

மேலும் அனிதா சம்பத் விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை எடுத்து மேலும் தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டு பிரபலமான நபர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

செய்தி வாசிப்பாளராக சம்பாதித்து வைத்திருந்த பெயர் புகழை அடுத்து ஜீ தமிழ், விஜய் டிவி சீரியல்களில் குணச்சித்திர நடிப்பில் கலக்கிய இவர் சொந்தமாக youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

இப்படியும் பணம் சம்பாதிக்கணுமா..

இந்த youtube சேனல் மூலம் வருவாய் பார்த்து வரும் அனிதா சம்பத் பல விஷயங்களை வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து விடுவார். அந்த வகையில் தன்னுடைய புது வீட்டின் பால் காச்சிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனை அடுத்து இவர் அந்தமானுக்கு சுற்றுலா சென்று இருந்த வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் பாராட்டுதல்கள் பெற்றதை அடுத்து தற்போது செய்திருக்கும் செயலால் அனைவரும் இவர்களை விளாசித் தள்ளி இருக்கிறார்கள்.

விளாசம் நெட்டிசன்கள்..

அப்படி வலைதள வாசிகள் இவரை விளாச காரணம் என்ன தெரியுமா? தற்போது இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையே சில பிரச்சனைகள் புகைச்சல் ஆக்கிக் கொண்டு வருவதோடு மாலத் தீவில் இருக்கும் இந்தியர்களை வெளியேற்ற வேண்டும் என மாலத்தீவு அதிகாரிகள் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கக்கூடிய வேளையில் மாலத்தீவுக்கு இந்தியர்கள் யாரும் சுற்றுலா செல்ல வேண்டாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதனைத் தெரிந்து கொண்டும் அனிதா சம்பத் தற்போது மாலத்தீவு சென்று அங்கு சில நாட்களைக் இருந்து கழித்து டிராவல் வீடியோவை தனது youtube பக்கத்தில் வெளியிட்டதை அடுத்த தான் நெட்டிசன்கள் விளாசித் தள்ளி இருக்கிறார்கள்.

மேலும் பணம் சம்பாதிக்க வேறு வழியே இல்லையா? இப்படியும் பணம் சம்பாதிக்கணுமா? என்று கணவருடன் அனிதா சம்பத் செய்த வேலையை குறித்து நெட்டில்சன்கள் விவகாரமாக திட்டி இருப்பதோடு பிரபலங்கள் இது போல செய்யும் தவறால் பலரும் தவறுகள் செய்ய வழியினை ஏற்படுத்தி தருவதாக கூறியிருக்கிறார்கள்.

மேலும் சில வலைதள வாசிகள் இந்தியாவில் சுற்றி பார்க்க வேறு இடமே இல்லையா? என்பது போன்ற கமெண்டுகளை போட்டு இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி இந்த வேலையை இவர் செய்தாமல் இருந்திருக்கலாம் என போல பலரும் பேசும்படி ஆகிவிட்டது. எனவே இனியாவது இது போன்ற தவறுகளை செய்யாமல் இருந்தால் நன்மை ஏற்படும் என்பதை அனிதா சம்பத் புரிந்து கொள்வாரா என்பதை வர இருக்கும் நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: அப்பா வயசு நடிகருடன் குட்டி நடிகை அட்டூழியம்.. பட வாய்ப்புக்காக இப்படியுமா.. காரி துப்பும் கோலிவுட்..

Exit mobile version