தப்பான உறவில் விழ்ந்தேன்…கேரியர் சருக்கியதால் மீண்டு வந்தேன் நடிகை அஞ்சலி ஓப்பன் டாக்…!!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை வளர்ந்து வரும் நடிகைகளின் வரிசையில் இருக்கும் நடிகை அஞ்சலி பேசி இருக்கும் பேச்சால் தற்போது இணையத்தில் பரபரப்பு அதிக அளவு ஏற்பட்டுள்ளது.

 மிகத் திறமையாக நடிக்க கூடிய ஆற்றலை பெற்றிருக்கும் நடிகை அஞ்சலி தான் தவறான உறவில் இருந்ததாக ஓபன் டாக்  மூலம் இணையத்தில் சுனாமி ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் இளைஞர்கள் அனைவரும் அதிர்ந்து விட்டார்கள்.

 தெலுங்கு திரை உலகின் மூலம் நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற அஞ்சலி திரையுலக வாழ்க்கையில்  எனக்கு என்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள உதவியது தமிழ் சினிமா தான்.

 இவர் தமிழில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம்  அறிமுகமாகி இருந்தார் .முதல் படத்திலேயே எதார்த்த நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு தொடர்ந்து அங்காடித் தெரு, தூங்கா நகரம், எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி இறைவி போன்ற படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் அடுத்தடுத்து அமைந்தது.

 மேலும் இதில் அஞ்சலி நடித்த எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் நடிகர் ஜெய் இவருக்கு நண்பராக அறிமுகம் ஆனார். இதனை அடுத்து எனக்கு வாய்த்த அடிமைகள், பலூன் போன்ற படங்களில் தொடர்ந்து ஜெயுடன் இணைந்து நடித்திருந்தார்.

 இதனிடையே இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.அது மட்டுமல்லாமல் சில புகைப்படங்கள் இவர்கள் இருவரும் காதலின் இருப்பதை உறுதி செய்யும் விதத்தில் இருந்த நிலையில் தற்போது இவர்கள் காதல் தோல்வியில் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும்  காதலில் இருந்த சமயத்தில் பல பட வாய்ப்புகளை இவர் தவறவிட்ட அதற்கு காரணம் இந்த காதல் தான் என்று கூறப்படுகிறது.

அது மட்டுமல்ல தயாரிப்பாளர் ஒருவர் கட்டுப்பாட்டில் அஞ்சலி இருப்பதுதான் என்ற கிசுகிசுக்கள் எழுந்த நிலையில் தற்போது முதல் முறையாக டாக்ஸிக் ரிலேஷன்ஷிப் குறித்து ஊடகம் ஒன்றுக்கு இவர் ஓப்பன் டாக் பேட்டியை தந்திருக்கிறார்.

அதில் ஒரு குறிப்பிட்ட நபரோடு ரிலேஷன்ஷிப்பில் இருந்ததால் தான் சினிமாவில் கவனம் செலுத்த முடியவில்லை என்று அவர் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவருடைய வளர்ச்சிக்கு தடையாக இருந்த அந்த உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்தது தான் தனது கேரியரை பாதித்துள்ளதாக அவர் கூறி இருப்பதும் அந்த நபர் யார் என்ற என்ற கேள்விக்கு கடைசி வரை பதில் அளிக்காமல் மழுப்பி இவர் பேசியிருக்கிறார். இதனால்தான் கடந்த இரண்டு ஆண்டுகளில் இவர் நடித்த படங்கள் ஏதும் வெளிவரவில்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam