அந்த இடத்தில் தகாத முறையில் உரசிய நபர்.. விஜய் டிவி நடிகை கொடுத்த பதிலை பாருங்க..!

திரைப்படங்கள் போலவே சின்னத்திரை சீரியல்களும் இன்று மக்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பு பெற்று இருப்பதோடு அந்த சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கும் பெயரும் புகழும் கிடைத்துள்ளது.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சக்திவேல் சீரியலில் நடித்து வரும் அஞ்சலி பாஸ்கர் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த தொடரில் இவரது நடிப்பை பலரும் பாராட்டுகள்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

நடிகை அஞ்சலி பாஸ்கர்..

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சக்திவேல் சீரியலானது பெரும்பாலான இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இருப்பதோடு டிஆர்பி ரேட்டை எகிர வைக்க கூடிய வகையில் ஒவ்வொரு நாளும் விறு விறுப்பாக ரசிகர்கள் மத்தியில் பேசக்கூடிய தொடராக உள்ளது.

இந்த சீரியலில் நடித்து வரும் நடிகை அஞ்சலி பாஸ்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும் போது இது வரை தான் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்தித்ததே இல்லை என்று கூறியது இணையங்களில் வைரலாகிவிட்டது.

இதற்குக் காரணம் திரைப்படங்களில் வருவது போல ஒரு சம்பவம் தன் வாழ்க்கையில் நடந்ததாக கூற இவர் அப்படி என்ன சம்பவம் நடந்தது என்பதை விரிவாக விளக்கி இருக்கிறார்.

தகாத முறையில் உரசிய நபர்..

இந்த சம்பவம் பற்றி பேசும் போது பெண்கள் பேருந்தில் செல்லும் போது ஆண்கள் அவர்களை சீண்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் நானும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவள் தான்.ஒரு முறை நான் பேருந்தில் பயணம் செய்தபோது எனக்கு கூட அது போன்ற மோசமான அனுபவம் ஏற்பட்டது.

அந்த அனுபவத்தில் ஒரு நடுத்தர வயதுடைய நபர் என்னை தகாத முறையில் உரசினார். எனினும் அது பற்றி யாரும் கவலை கொள்ளாமல் அவர்கள் அவர்களது வேலையை பார்த்து இருந்தார்கள்.

இதனை அடுத்து எனக்கு கோபம் வந்ததை அடுத்து அந்த நபருக்கு ஒரு குத்து விட்டேன். அந்த நபரும் ஏதும் பேசாமல் இறங்கிச் சென்றுவிட்டார். 

ஆனால் எனக்கு ஆதரவாக அந்த பேருந்தில் இருந்த பெண்கள் கூட வரவில்லை என்ற ஆதங்கத்தை அஞ்சலி பாஸ்கர் கூறியிருக்கிறார்.

அஞ்சலி பாஸ்கரின் பதில்..

மேலும் அஞ்சலி பாஸ்கர் பேசும் போது பெண்களுக்கு பெண்களே துணையாக வராமல் இருப்பது தான் இது ஆச்சரியப்படக்கூடிய வகையில் உள்ளது என்று சொன்னதோடு தனக்கும் எந்த பெண்களும் அந்த சமயத்தில் உதவி செய்யவில்லை என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் இன்றும் இது போல பேருந்துகளில் நடக்கும் அவலங்களை எவ்வளவு சொன்னாலும் தீராது என்று சொல்லி இருக்கிறார்கள்.

எனவே உங்களுக்கு இது போன்ற அனுபவங்கள் ஏற்பட்டு இருக்கலாம். அப்படிப்பட்ட அனுபவங்களை பற்றி தற்போது ரசிகர்கள் அவர்கள் நண்பர்களோடு ஷேர் செய்து வருகிறார்கள்.

அத்துடன் அந்த இடத்தில் தகாத முறையில் உரசிய நபர் குறித்து விஜய் டிவி நடிகை சொன்ன பதிலுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version