சமந்தா, காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே எல்லோரும் வாய்ப்புக்காக இதை பண்றாங்க.. அஞ்சலி ஓப்பன் டாக்..

தமிழ் சினிமாவில் மிக முக்கிய முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை அஞ்சலி. ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அவரை தமிழ் சினிமாவில் அதிகமாக பார்க்க முடியவில்லை. ஆனால் நடித்த படங்களில் தன் நடிப்பால் முத்திரை பதித்தவர்.

நடிகை அஞ்சலி

கற்றது தமிழ் என்ற படத்தில், இயக்குநர் ராம் இயக்கத்தில் அறிமுகமானார் நடிகை அஞ்சலி. அதன்பிறகு அங்காடித்தெரு படம்தான் அவருக்கு நல்ல ஒரு அறிமுகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொடுத்தது.

தொடர்ந்து எங்கேயும் எப்போதும், சகலகலா வல்லவன், வத்திக்குச்சி, நாடோடிகள் 2, மாப்பிள்ளை சிங்கம், தம்பி வெட்டேத்தி சுந்தரம், ஆயுதம் செய்வோம் உள்ளிட்ட படங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

ஜெய்யுடன் காதல்

தமிழை காட்டிலும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்திருக்கிறார் அஞ்சலி. எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த போது நடிகர் ஜெய்க்கும், அஞ்சலிக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் சில ஆண்டுகள் கணவன், மனைவியாக லிவிங் டு ரிலேசன்ஷிப்பில் வாழ்ந்ததாகவும் தகவல்கள் பரவியது.

ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி, அஞ்சலியை பிரேக்கப் செய்துவிட்டு, அடுத்து சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படும் வாணி போஜனுடன், லிவிங் டூ ரிலேசன்ஷிப்பை தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்போது தமிழ் சினிமாவில் மட்டுமின்றி பான் இந்தியா படங்களிலும் கூட ஒரு பாட்டுக்கு மட்டும் கதாநாயகி நடனம் ஆடுவது அதிகரித்து வருகிறது. ஆனால் இது முதலிலேயே தமிழ் சினிமாவில் இருந்ததுதான்.

ஒரு பாட்டுக்கு நடனம்

30 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பாட்டுக்கு நடனம் என்பது தமிழ் சினிமாவில் அடிக்கடி நடந்தது. ஜெண்டில்மேன் படத்தில் கவுதமி ஆடியிருப்பார். இந்து படத்தில் குஷ்பு ஆடியிருப்பார்.

வானமே எல்லை படத்தில் நடிகை பானுப்பிரியா ஆடியிருப்பார். பிதாமகன் படத்தில் சிம்ரன் ஆடியிருப்பார். இதுபோல் சில்க் ஸ்மிதா, பல படங்களில் பாடல் காட்சிகளில் தோன்றியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:  பத்து நாள் கூட இது இல்லாம தூங்குனது இல்ல.. திவ்யதர்ஷினி கண்ணீர்..

ஆனால் சமீபமாக புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு, சமந்தா ஐட்டம் பாட்டுக்கு ஆடிய பிறகு பல படங்களில் இது ஒரு முக்கிய விஷயமாக தொடர்கிறது.

இதுகுறித்து நடிகை அஞ்சலி ஒரு நேர்காணலில் கூறியதாவது,
மெயின் ஸ்கிரீனில் நடிக்கும் கதாநாயகி, அதே படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினால் அது நிறைய விதமாக பேசப்பட்டது.

அவங்க வந்து பீல்ட் அவுட் ஆகறாங்களோ, அல்லது பணத்துக்காக ஆடறாங்களோ, இல்லே அப்படீ இப்படீன்னு ஏதேதோ விமர்சனங்கள் வருகிறது.

ஸ்டைலாக மாறிவிட்டது

இப்போது இருக்கிற கரண்ட் ஜெனரேஷனில் வந்து அது ஒரு ஸ்டைலாவே மாறிவிட்டது. ஒரு ஸ்டேட்மெண்ட்டா மாறிடுச்சு.

ஒரு பெரிய ஹீரோ படத்துல வந்து ஒரு முன்னணி ஹீரோயின் வந்து ஸ்பெஷல் பாட்டுக்கு ஆடுறது அந்த படத்தை வந்து, அந்த பாட்டு தூக்கி நிறுத்தும் என்று எதிர்பாரக்கப்படுகிறது.

அப்படி ஒரு உணர்வை, ரசிகர்களுக்கு கொடுக்கிறது. அதே மாதிரி, ரசிகர்களும் அந்த ஒரு பாட்டு, சிறப்பு பாடல் காட்சியில் ஒரு கதாநாயகியை பார்த்துவிட வேண்டும் என்பது அவர்களுக்கும் பிடித்திருக்கிறது.

இதை ஒரு வணிக லாப நோக்கத்திற்காகவும் பார்க்கப்படுகிறது.

எல்லாருமே செய்கிறார்கள்

எல்லா நடிகைகளுமே இதை செய்கிறார்கள். சமந்தா, காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே எல்லாருமே செய்கிறார்கள்.

இப்போது தெலுங்கில் நெம்பர் 1 கதாநாயகிகள் எல்லோருமே, முன்னணி கதாநாயகிகள் எனக் கூறப்படும் எல்லா நாயகிகளுமே ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:  கைதி படத்தை மிஸ் பண்ணேன்… ஓகே சொல்லிட்டு கார்த்தி எனக்கு போன் பண்ணி கேட்ட வார்த்தை.. விஜய் சேதுபதி பேச்சு..

நான் இதுக்கு முன்னாடி பிளாக் பஸ்டர் என்று ஒரு பாட்டு இப்படி பண்ணியிருக்கேன். அந்த பாட்டு, படத்துல ஆல்பம்ல கூடவந்துருக்கு என்று கூறியிருக்கிறார் நடிகை அஞ்சலி.

சமந்தா, காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே எல்லோரும் வாய்ப்புக்காக, ஐட்டம் பாடல் காட்சியில் குத்தாட்டம் போடறாங்க, என்பதை அஞ்சலி ஓப்பனாக இந்த நேர்காணலில் கூறிவிட்டார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version