நிஜமாவே ஒரு பையனுடன் இப்போது அந்த உறவில் இருக்கிறேன்.. அஞ்சலி வெளியிட்ட தகவல்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அஞ்சலி. பொதுவாக உடல் பருமனான நடிகைகளுக்கும் கருப்பான நடிகைகளுக்கும் தமிழ் சினிமாவில் வரவேற்பு கிடைக்காது என்று கூறப்பட்டாலும் அந்த இரண்டும் இருந்தும் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்றவர் நடிகை அஞ்சலி.

ஆனால் போகப் போக அதை மட்டும் வைத்துக்கொண்டு தமிழ் சினிமாவில் அவரால் வரவேற்பு பெற முடியவில்லை. அதனை தொடர்ந்து பல சிகிச்சைகளை மேற்கொண்டு வெள்ளையாக மாறினார் அஞ்சலி. கற்றது தமிழ், அங்காடி தெரு மாதிரியான ஆரம்பக்கட்ட திரைப்படங்களில் பார்க்கும் பொழுது அஞ்சலி கருப்பாக இருப்பதை பார்க்க முடியும்.

சினிமாவுக்காக மாறிய அஞ்சலி:

ஆனால் அதற்கு பிறகு வந்த கலகலப்பு மாதிரியான திரைப்படங்களில் அவர் வெள்ளையாக இருப்பதை பார்க்க முடியும். வெள்ளையாக மாறிய அஞ்சலிக்கு உடல் எடை என்பது ஒரு பெரும் பிரச்சனையாகவே இருந்தது. அதற்குப் பிறகு உடல் எடை காரணமாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

கவர்ச்சியாக நடித்தாலும் கூட அவரது உடல் பருமன் காரணமாக ரசிகர்கள் அதை ரசிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். இதனை தொடர்ந்து சமீபத்தில் உடல் எடையையும் குறைத்து முன்பிருந்ததை விட தற்சமயம் அழகாக தோற்றம் அளிக்க துவங்கியிருக்கிறார் அஞ்சலி.

இந்த நிலையில் அஞ்சலியின் திருமணம் குறித்து அவரே ஒரு பேட்டியில் பேசியிருந்தார் அதில் பேசிய அஞ்சலி எனக்கு திருமணம் செய்து வைப்பதில் என்னுடைய பெற்றோரை விட மீடியாக்கள் மிகுந்த அக்கறையுடன் இருக்கின்றனர்.

தெலுங்கில் வாய்ப்பு:

இதுவரை மீடியாக்களில் எனக்கு நான்கு முறை திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை நான் ஒருவரை கூட காதலிக்கவில்லை. ஆனால் இவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். அவரை காதலிக்கிறேன். இன்னொருவருடன் காதலை முடித்துக் கொண்டேன்.

வேறு ஒரு நபருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன் என்று பல செய்திகளை கூறிக் கொண்டிருக்கின்றனர். முதலில் இந்த செய்திகளை எல்லாம் கேட்ட பொழுது எனது குடும்பத்தினர் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து கல்யாண சர்ச்சை:

ஆனால் போகப் போக அதெல்லாம் பொய் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர் இப்பொழுது நானே ஒரு பையனை அழைத்து வந்து அவனுடன் உறவில் இருக்கிறேன் என்று எங்கள் வீட்டில் கூறினால் கூட அவர்கள் அதை நம்ப மாட்டார்கள்.

ஆரம்பத்தில் இந்த கிசுகிசுக்கள் எல்லாம் எனக்கு மோசமாக தோன்றினாலும் போக போக அவை எனக்கு பழகி விட்டது. இதன் மூலம் ரசிகர்களின் கவனம் என் மீது இருக்கிறது. காய்த்த மரம் தான் கல்லடி படும் என்று கூறுவார்கள் அதே போல ஒரு நேர்மறையான விஷயமாக இதை நான் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார் அஞ்சலி. 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version