என் வீட்டில் இதுக்கு பழகிட்டாங்க.. 4 முறை எனக்கு அது நடந்துடுச்சு.. அஞ்சலி ஓப்பன் டாக்..!

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை அஞ்சலி தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகை அஞ்சலி வேகமாக திரை உலகை வளர்ந்து வந்ததை பார்த்து நிச்சயமாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விரைவில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் காதல் தோல்வியால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

நடிகை அஞ்சலி..

இதனை அடுத்து அதிலிருந்து வெளியே வந்திருக்கும் இவர் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருவதை அடுத்து தற்போது ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழுமலை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் பிரம்மாண்ட இயக்குனர் இயக்கம் கேம் சேஞ்சர், கேம்ஸ் ஆப் கோதாவரி உள்ளிட்ட பல படங்களில் முழுமூச்சாகவும் பிஸியாகவும் நடித்துக் கொண்டிருக்கும் இவர் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

இணையத்தில் தற்போது தனது திருமணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு வகையான கருத்துக்கள் வெளிவந்துள்ள நிலையில் நடிகை அஞ்சலி தனது திருமணம் குறித்து பேசி இருக்கும் விஷயமானது இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் திரையுலகை பொருத்த வரை கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ற படங்களில் நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகையாக வெளிப்படுத்தினார்.

நான்கு முறை நடந்திடுச்சு..

அந்த வகையில் இவருக்கு பல பட வாய்ப்புகள் அடுத்தடுத்து தேடி வந்த நிலையில் இவர் அங்காடி தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை போன்ற படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தெலுங்கு இண்டஸ்ட்ரிலும் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இவர் நடிகர் ஜெயுடன் லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வருவதாக செய்திகள் அடிபட்ட போதும் காதல் தோல்வியால் திரை உலகை விட்டு விலகி இருந்த நடிகை அஞ்சலி மீண்டும் சிங்கம் 2 படத்தில் பாடல் ஒன்றில் நடனம் ஆடி ரீஎன்ட்ரி தந்தார்.

எனினும் அடுத்து இவருக்கு ஜெயம் ரவியோடு சகலகலா வல்லவன் படத்தில் நடித்த பிறகு பெரிய வாய்ப்புகள் கிடைக்காத சூழ்நிலையில் ஃபால் என்ற வெப் சீரியலில் நடித்தார்.

இப்போது கிடைத்திருக்கும் பட வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ள முழுமூச்சில் நடித்துக் கொண்டு வரும் இவர் தன்னை சுற்றி தனது திருமணம் பற்றிய பேச்சு இணையங்களில் பல வருடங்களாக பேசும் பொருளாகியுள்ளது.

என் வீட்டில பழகிட்டாங்க..

அது பற்றி கூறும் போது நடிகர் ஜெயுடன் லிவிங் டுகதர் முறையில் கிசுகிசுக்கப்பட்ட பிறகு அவரை பிரிந்து விட்டு தெலுங்கு திரை உலகில் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் பரவியது. இதற்கெல்லாம் அஞ்சலி எந்த ரெஸ்பான்ஸ் செய்யவில்லை.

இப்போது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் திருமண சர்ச்சை குறித்து பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி உள்ளது.

இதற்கு காரணம் அஞ்சலி பேட்டியில் சொல்லும் போது எனக்கு மூன்று நான்கு முறை சமூக வலைத்தளங்களிலேயே திருமணம் செய்து விட்டார்கள். நான் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக முன்பெல்லாம் வதந்திகள் வரும் போது என் வீட்டில் கவலை அடைந்தார்கள்.

ஆனால் தற்போது அப்படி அல்ல. நான் உண்மையில் யாரையாவது திருமணம் செய்து கொண்டு போய் என் வீட்டில் என்றாலும் அவர்கள் நம்ப மாட்டார்கள். எனது திருமணத்திற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது.

சினிமாவில் நான் முழு மூச்சாக நடித்து வருகிறேன். எனவே அது பற்றி நினைப்பதற்கு நேரமில்லை என்று கூறி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version