பிரேக்அப்-க்கு பின் புதிய ஆண் நண்பர்.. மார்போடு அனைத்து போஸ் கொடுத்துள்ள அஞ்சலி..! யாருன்னு பாருங்க..!

தமிழ் சினிமாவில் முதன் முதலில் கடந்து 2007 ஆம் ஆண்டு வெளிவந்த “கற்றது தமிழ்” திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி.

அஞ்சலியின் அறிமுகம்:

அதற்கு முன்னதாக இவர் தெலுங்கு சினிமாவில் பல்வேறு விளம்பர திரைப்படங்களிலும் சில திரைப்படங்களில் நடித்து வந்தார் .

ஆந்திராவை சொந்த ஊராகக் கொண்ட நடிகை அஞ்சலி ஆரம்பத்தில் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வந்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு தேடி வந்தது.

முதல் படத்திலிருந்தே குறிப்பாக கற்றது தமிழ் திரைப்படத்தில் ஆனந்தி என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்ததற்காக மிகச்சிறந்த நடிகைக்கான தென்மண்டல ஃபிலிம் பேர் விருது பெற்று கௌரவிக்கப்பட்டார்.

அதை எடுத்து வசந்த பாலன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த அங்காடி தெரு திரைப்படத்தில் கனி என்ற கேரக்டரில் நடித்து மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

கதாபாத்திரங்களுக்கு கட்சிதமாக பொருந்திய அஞ்சலி:

அந்த திரைப்படத்தில் கனி என்ற கேரக்டரில் நடித்திருந்த அஞ்சலிக்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது .

இந்த திரைப்படங்களுக்கு பிறகு சிறந்த இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் பலம் வலம் கொண்டு இருந்தார் அஞ்சலி.

ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி காட்டிய அஞ்சலி தேவையான கதாபாத்திரங்களுக்கு பொருந்துபவராகவும் கருதப்பட்டார்.

தொடர்ந்து இவரது நடிப்பில் எங்கேயும் எப்போதும் , மங்காத்தா ,ரெட்டைச்சுழி , தூங்காநகரம், மகாராஜா, சுருங்காளி, கலகலப்பு, சேட்டை, வத்திக்குச்சி, இறைவி, தரமணி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ரகசிய குடும்பம் நடத்திய அஞ்சலி:

சில மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கும் அஞ்சலி, தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகரான ஜெய் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்யாமலே அவருடன் லிவிங் லைஃப் வாழ்ந்து வந்தார்.

பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரேக் அப் செய்துவிட்டு அஞ்சலி தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வத்தை செலுத்தி வருகிறார்.

தற்போது 38 வயதாகும் அஞ்சலி பார்ப்பதற்கு இன்னும் அதே இளமை தோற்றத்தில் இருக்கிறார். அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் அழகழகான புகைப்படங்களையும் பதிவிட்டு வருவார் .

புதிய நண்பரை கட்டியணைத்து போஸ்:

அந்த வகையில் தற்போது. தன்னுடைய புதிய ஆண் நண்பர் எனக்கூறி மார்போடு அனைத்து போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அது யார்? என்று பதறி அடித்து போய் பார்த்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அதாவது தான் வளர்க்கும் செல்ல நாய் குட்டியை தான் அஞ்சலி கொஞ்சி “The best friendship day with my Best Friend Ever “என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version