ஓரினச்சேர்க்கையாளராக நான் நடிக்கும் போது.. நயன்தாரா கணவர் குறித்து நடிகை அஞ்சலி ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் மாநிறமாக இருந்தாலும் அறிமுகமான ஒரு சில திரைப்படங்கள் மூலமாகவே அதிகமாக வரவேற்பை பெற்றவர் நடிகை அஞ்சலி. சினிமாவிற்கு வந்த போது அஞ்சலி அதிகமாக கேலிக்கு உள்ளானார்.

ஏனெனில் அவர் வந்த பொழுது கருப்பு நிறத்தில் இருந்தார். பொதுவாகவே கருப்பு நிறத்தில் இருக்கும் நடிகைகள் தமிழ் சினிமாவில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அவர்களுக்கு எளிதாக வாய்ப்புகளும் கிடைக்காது.

அஞ்சலி

ஆனால் அஞ்சலி தேர்ந்தெடுத்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தனது நடிப்பை வெளிப்படுத்தினார். கற்றது தமிழ் திரைப்படத்தில் ஆனந்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் அஞ்சலி. அந்த திரைப்படம் பெரிதாக அப்பொழுது வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட ஆனந்தியின் கதாபாத்திரம் அதிகம் வரவேற்பு பெற்றது.

முக்கியமாக அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் அஞ்சலி ஒரு ஆரம்ப கட்ட நடிகையின் நடிப்பு போலவே அது இல்லை என்று கூறலாம். அதற்கு பிறகு அவர் நடித்த அங்காடி தெரு திரைப்படத்திலும் சிறப்பான நடிப்பை அஞ்சலி வெளிப்படுத்தி இருந்தார்.

நயன்தாரா கணவர் குறித்து

ஒரு கிராமத்தைப் பெண் போலவே தோன்றும் அளவிற்கு அவருடைய நடிப்பு இருந்தது. அதற்கு பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க  துவங்கியது .நிறைய பெரிய நடிகர்கள் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் அஞ்சலி.

அதற்குப் பிறகு அவருக்கு உடல் எடை அதிகரித்ததன் காரணமாக வரவேற்புகள் குறைய துவங்கின. கலகலப்பு திரைப்படத்தில் நடித்த போதே அஞ்சலியின் உடல் எடை அதிகரித்து இருந்தது. ஆனால் அவர் கவனத்தில் கொள்ளாமல் விட்டதால் பிறகு பட வாய்ப்புகள் குறைந்தது.

ஓரினச்சேர்க்கையாளராக நான் நடிக்கும் போது

தற்சமயம் மீண்டும் உடல் எடையை குறைத்து சினிமாவில் வாய்ப்புகள் தேடி வருகிறார் அஞ்சலி. அவர் கொடுத்த பேட்டி ஒன்று சமீபத்தில் பிரபலமாகி வருகிறது.  பாவ கதைகள் என்னும் படத்தில் அஞ்சலி நடித்த அனுபவத்தை கூறியிருந்தார்.

நிறைய இயக்குனர்கள் இயக்கத்தில் 20 நிமிடத்திற்கு ஒரு கதை என்று பல கதைகள் ஒன்றிணைந்து பாவ கதைகள் என்று திரைப்படமாக ஓ.டி.டியில் வெளியானது. அதில் அஞ்சலி ஒரு கதையில் நடித்திருந்தார் அந்த கதையை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.

ஜாதி கொலைக்கு எதிராக எடுக்கப்பட்டிருக்கும் அந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் அஞ்சலி அவருடைய தோழிக்கு முத்தமிடும் காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். அந்த காட்சியில் ஓரினச்சேர்க்கையாளராக தங்களை காட்டிக் கொள்வதற்காக அஞ்சலி அப்படி செய்திருப்பார்.

அந்த காட்சியில் நடித்த அனுபவம் குறித்து அஞ்சலி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது முதலில் அந்த காட்சியை குறித்து கேட்ட பொழுது எனக்கு சங்கடமாக தான் இருந்தது. நடிக்க வேண்டுமா என்று கூட யோசித்தேன். ஆனால் விக்னேஷ் சிவன் மற்ற அனைவரும் வந்து கதையை என்னிடம் கூறிய பிறகு நான் அதில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன் என்று அந்த காட்சி குறித்து கூறியிருக்கிறார் அஞ்சலி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version