ஆம்.. நான் அப்படியான உறவில் இருந்தேன்.. கூச்சமின்றி ஒப்புக்கொண்ட அஞ்சலி..!

2007 ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஆனந்தி என்கிற கதாபாத்திரமாக அறிமுகமானார் நடிகை அஞ்சலி. குறைந்த திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு பெற்ற ஒரு சில கதாநாயகிகளில் அஞ்சலி முக்கியமானவர்.

இத்தனைக்கும் அஞ்சலி நடித்த திரைப்படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களாக அமையவில்லை என்றாலும் கூட அவரது நடிப்பு தனித்துவமாக இருந்தது. கற்றது தமிழ் திரைப்படத்திலும் சரி அதற்கு பிறகு வந்த அங்காடித்தெரு திரைப்படத்தில் சரி அஞ்சலிக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது.

நடிகையாக வரவேற்பு:

ஏதோ கதாநாயகி வரவேண்டும் என்பதற்காக அந்த கதாபாத்திரங்கள் இருக்கவில்லை. எனவே அதுவே அவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது அதனை தொடர்ந்து திரைப்படங்களில் தொடர்ந்து வாய்ப்பை பெற்றார் அஞ்சலி.

அவர் நடித்த திரைப்படங்களில் பெரும்பாலான திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாத திரைப்படங்களாகவே இருந்தன. மங்காத்தா கலகலப்பு மாதிரியான ஒரு சில திரைப்படங்கள் மட்டும் கொஞ்சம் வரவேற்பை பெரும் திரைப்படங்களாக இருந்து வந்தன.

ஆரம்பத்தில் பெரிதாக கவர்ச்சியாக நடிக்காத அஞ்சலி அதன் பிறகு நிறைய திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்தார். சிங்கம் 2 திரைப்படத்தில் கூட ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனத்திற்காக வந்திருப்பார் அஞ்சலி.

வெளிப்படையாக பார்க்கும் பொழுது நடிகை அஞ்சலிக்கு சில நாட்களாக வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை என்று நினைக்கத் தோன்றினாலும் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஒரு திரைப்படத்திலாவது நடித்து வருகிறார் அஞ்சலி.

தெலுங்கில் வாய்ப்பு:

தற்சமயம் தெலுங்கு சினிமாவிலும் வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக அஞ்சலி இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அஞ்சலி சர்ச்சைக்குரிய சில தகவல்களை கூறியிருந்தார். கடந்த சில காலங்களாக மோசமான ஒரு உறவில் அவர் இருந்ததாக கூறுகிறார் அஞ்சலி.

அந்த உறவு ஒரு விஷமத்தனமான உறவு, தாமதமாகத்தான் அது எவ்வளவு மோசமானது என்பதை நான் புரிந்து கொண்டேன். அதன் பிறகு அந்த உறவிலிருந்து நான் வெளிவந்து விட்டேன்.

அப்படிப்பட்ட ஒரு உறவில் இருந்தது எனக்கு நானே கொடுத்துக் கொண்ட தண்டனை என்றுதான் நினைக்கிறேன் என்று அஞ்சலி கூறியிருக்கிறார் ஆனால் எந்த நபருடன் எந்த வகையான உறவில் இருந்தார் என்பது குறித்த எந்த ஒரு தகவலையும் அஞ்சலி கொடுக்கவில்லை. இருந்தாலும் இது குறித்து பலவித சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் சென்று கொண்டிருக்கின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version