காதலில் விழுந்த அஞ்சலி.. புதிய காதலன் யாருன்னு பாருங்க..!

தமிழ் சினிமாவின் ரசிகர்கள் மனம் கவர்ந்த நாயகியாக இருப்பவர் நடிகை அஞ்சலி. பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்.

அஞ்சலி

குறிப்பாக ராம் இயக்கிய கற்றது தமிழ் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அஞ்சலி. முதல் படத்திலேயே சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார்.

தொடர்ந்து அங்காடித்தெரு அஞ்சலிக்கு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை தமிழ் சினிமாவில் கொடுத்தது. இந்த படத்தில் கனி என்ற கேரக்டரில் ஜவுளிக்கடையில் வேலை செய்யும் ஏழை பெண்ணின் துன்பங்களை, வேதனைகளை மிக அற்புதமாக தன்னுடைய நடிப்பில் காட்டி இருந்தார்.

எங்கேயும் எப்போதும்

அடுத்து எங்கேயும் எப்போதும் படத்தில் அஞ்சலியின் துருதுருப்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து வத்திக்குச்சி, இறைவி, கலகலப்பு, நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அதன்பிறகு தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால், தெலுங்கு பக்கம் சென்றார். தெலுங்கில் தொடர்ந்து நிறைய படங்களில் அஞ்சலி நடித்து வருகிறார். இடையில் தமிழில் சில படங்களின் நடிக்க முயற்சித்தார்.

ஹரி இயக்கத்தில் சிங்கம் 3 படத்தில் சூரியாவுடன் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய்யுடன் வாழ்ந்தார்

இதற்கிடையே காதல் கிசுகிசுக்களில் அதிகளவில் அஞ்சலி சிக்கினார். குறிப்பாக நடிகர் ஜெய்யுடன் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் அஞ்சலி இருந்தார் என்று கூறப்பட்டது.

ஆனால் ஒரு கட்டத்தில் ஜெய்க்கும் அஞ்சலியும் பிரிந்து விட்டதாகவும் தெரிகிறது.

தெலுங்கு படத் தயாரிப்பாளர்

தெலுங்கு படத் தயாரிப்பாளர் ஒருவருடன் இப்போது அஞ்சலி நெருக்கமாக பழகி வருவதாகவும், அவரை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் வைரலாகி வருகிறது. அந்த தெலுங்கு படத் தயாரிப்பாளர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.

37 வயதில்

இப்போது 37 வயதாகும் அஞ்சலிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற நிலையில், அவரை பற்றிய கிசுகிசுக்கள் தொடர்ந்து வருகின்றன. ஏற்கனவே அவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்றும், அமெரிக்கவில் செட்டிலாகி விட்டார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை. என்னை பற்றிய தவறான வதந்திகளை பரப்பி விடுகின்றனர் என்று அஞ்சலியே ஒரு நேர்காணலில் கூறி வருத்தப்பட்டார்.

வெளியிடங்களுக்கு செல்கின்றனர்

ஆனால் தற்போது தெலுங்கு பட தயாரிப்பாளருடன் அஞ்சலி நெருக்கமாக பழகி வருவதாகவும், படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் அவருடன்தான் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அஞ்சலி, அந்த தயாரிப்பாளருடன் சேர்ந்து கொண்டு அடிக்கடி வெளியிடங்களுக்கு சென்று வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இருவருக்கும் திருமணம் என்றும் கூறப்படுகிறது.
விரைவில் அறிவிப்பு

ஆனால் இதுவரை இதுகுறித்து முறையாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இப்போது தெலுங்கில் மூன்று படங்களில் அஞ்சலி நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் அஞ்சலி திருமணம் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், தனது திருமணம் குறித்து விரைவில் அறிவிப்பாரா என்று அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

எனினும் காதலில் விழுந்த அஞ்சலியின் புதிய காதலன் தயாரிப்பாளர் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version