2வது மனைவியாகும் நடிகை அஞ்சலி..! மாப்பிள்ளை யாரு தெரியுமா..?

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளாக சிலர் மட்டுமே அதிக கவனத்தை ஈர்த்துவிடுகின்றனர். ஆனால் நல்ல நடிகையாக இருந்தாலும் சிலருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

நடிகை அஞ்சலி

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அஞ்சலி. ஆந்திராவைச் சேர்ந்த அவர் பள்ளிப் படிப்பை அங்கு முடித்துவிட்டு, சென்னைக்கு வந்து கல்லூரி படிப்பை தொடர்ந்தார். முதலில் குறும்படங்களில் நடிக்க துவங்கினார்.

சில விளம்பர படங்களில் நடித்த அவர், தொடர்ந்து சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். அதன்பிறகு 2007ம் ஆண்டில் இயக்குனர் ராம் இயக்கத்தில் கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

சிறந்த அறிமுக நடிகை

இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகை என்ற தென்மண்டல பிலிம்பேர் விருது பெற்றார். தொடர்ந்து வசந்தபாலன் இயக்கத்தில் அங்காடித்தெரு படம், அஞ்சலிக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது.

ஆயுதம் செய்வோம், மங்காத்தா, தூங்கா நகரம், மகாராஜா, தம்பி வெட்டோத்தி சுந்தரம், கருங்காலி, கலகலப்பு, சேட்டை, வத்திக்குச்சி, சகலகலாவல்லவன், தரமணி, மாப்ள சிங்கம், பலூன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: நீ என்னமா வெறும் ஜட்டியோட உக்காந்திட்டு இருக்க.. ரசிகர்களை பதற வைத்த CWC பவித்ரா லட்சுமி..!

எங்கேயும் எப்போதும்

அங்காடித்தெரு படத்துக்கு பிறகு அஞ்சலிக்கு, தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அதில் எங்கேயும் எப்போதும் படத்தில் ஜெய் – அஞ்சலி ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. அதே போல் அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் காதலர்களாகி விட்டனர்.

பிறகு இருவரும் லிவிங் டூ ரிலேசன்ஷிப்பில் சில ஆண்டுகள் இருந்த நிலையில், பிறகு பிரிந்துவிட்டனர்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பின்றி போனதால் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் நடிகை அஞ்சலி. அவருக்கு இப்போது வயது 38 ஆகியும் இன்னும் திருமணமாகவில்லை.

ஜெய்யுடன் திருமணம்

ஆனால் அவரது திருமணம் பற்றிய வதந்திகள் அடிக்கடி பரவி, சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கமாகி விட்டது. ஜெய்யுடன் திருமணம் நடந்துவிட்டதாகவும் முதலில் தகவல் பரவியது. 2013ல் அஞ்சலிக்கு திருமணமாகி விட்டதாக இயக்குனர் மு களஞ்சியமும் சொன்னது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் இப்போது அஞ்சலிக்கு திருமணம் செய்து வைத்தே ஆக வேண்டும் என்ற முடிவில் அஞ்சலி குடும்பத்தினர் தீவிரமாக உள்ளனர். அதன்படி தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவருக்கும், அஞ்சலிக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: அரேபிய குதிரைன்னு கரெக்டா தான் சொல்லி இருக்காங்க.. டூ பீஸ் உடையில் அனுஷ்கா.. பலரும் பார்த்திடாத போட்டோஸ்..

தெலுங்கு பட தயாரிப்பாளர்

ஆனால் அந்த தயாரிப்பாளர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்று கூறப்படுகிறது. கடந்த ஓராண்டாக அஞ்சலியும், அந்த தயாரிப்பாளரும் நெருங்கி பழகி வருவதாகவும் தெரிகிறது. அதனால் அஞ்சலி குடும்பத்தார், அந்த தயாரிப்பாளரையே அஞ்சலிக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளனர்.

அஞ்சலி – தெலுங்கு பட தயாரிப்பாளர் திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வௌியாக வாய்ப்புள்ளதாக, தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

2வது திருமணம்

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் மிகவும் கவனிக்கப்பட்ட நடிகையாக இருந்த அஞ்சலி 38 வயதில் திருமணம் செய்ய இருக்கிறார். ஆனால் தெலுங்கு படத் தயாரிப்பாளருக்கு 2வது மனைவியாகிறார் நடிகை அஞ்சலி என்பதுதான் அவரது ரசிகர்களுக்கு சற்று வருத்தமளிக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version