17 வயசுல 48 வயசு நடிகருடன் திருமணம்..முதலிரவு முடிஞ்ச அப்புறம் தான் கணவர் பத்தி தெரிஞ்சது.. பேபி அஞ்சு ஓப்பன் டாக்..!

சிறுவயது முதலே தமிழ் தெலுங்கு மலையாளம் என்று அனைத்து மொழிகளிலும் குழந்தை கதாபாத்திரத்திலேயே அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை அஞ்சு.

ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்த அஞ்சு தமிழில் உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் முதன்முதலாக குழந்தை கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதை தொடர்ந்து குழந்தை கதாபாத்திரமாகவே நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மஞ்சு 1982 வரை தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வந்த அஞ்சு பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை இழக்கத் தொடங்கினார். 1983ல் இருந்து வருடத்திற்கு ஒரு படம் நடிப்பதே பெரிய விஷயமாக அவருக்கு இருந்தது.

வரவேற்பை பெற்ற நடிகை:

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பை இழந்து சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார். அஞ்சு பிறகு 2007 ஆம் ஆண்டு வீராப்பு திரைப்படத்தில் மீண்டும் மக்கள் மத்தியில் தோன்றினார். தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்தார்.

2013 ஆம் ஆண்டுக்கு பிறகு திரும்பவும் நடிப்பதை விட்டு விட்டார். இந்த நிலையில் ஏன் அடிக்கடி இவர் சினிமாவை விட்டு சென்றார் என்பது குறித்து தனது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும்பொழுது எனது இளமை காலங்களில் இருந்தே நிறைய தவறுகளை செய்து விட்டேன்.

இளமை காலத்திலேயே எனது தந்தை வயதில் இருந்த ஒரு நபரை நான் காதலித்தேன். எனது குடும்பத்தார் எல்லாம் என்னை எதிர்த்த பொழுதும் அதையெல்லாம் மீறி அவரை திருமணம் செய்து கொண்டேன். ஆனால் திருமணத்திற்கு பிறகுதான் அவருக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடந்தது என்றும் அவர்களது பிள்ளைகள் என்னைவிட வயதில் மூத்தவர்கள் என்பதும் எனக்கு தெரிந்தது.

சோகமான வாழ்க்கை:

அதற்கு பிறகு மிகவும் வருத்தப்பட்டேன். பிறகு நான் கர்ப்பமாக இருந்தபோது அவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. இதனால் இனி இருவரும் சேர்ந்து வாழ முடியாது என்று தெரிந்து விவாகரத்து பெற்று வந்து விட்டேன்.

பின் எனது குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும் பொழுது அவர் இறந்து விட்டதாக எனக்கு ஒரு செய்தி வந்தது. அப்பொழுது அவரை சென்று பார்க்கலாம் என்று எனது அம்மா எவ்வளவோ அழைத்த பொழுதும் நான் செல்லவில்லை.

ஏனெனில் கடைசியாக அவரை விட்டு பிரியும் பொழுது நீ செத்தாலும் சரி நான் செத்தாலும் சரி இந்த வீட்டு வாசலை மிதிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டுதான் வந்திருந்தேன். அதனால் அவர் இறந்தபோது அவரது முகத்தை கூட நான் பார்க்கவில்லை எனது மகன் அவருடைய தந்தையை பார்த்ததே கிடையாது.

திரைப்படங்களில் அவர் வரும் பொழுது அதை காட்டி உன் அப்பா இவர்தான் என்று காட்டி இருக்கிறேன். அதன் பிறகு வீராப்பு, பொல்லாதவன் போன்ற திரைப்படங்களில் நடித்தேன். அதன் பிறகு மீண்டும் எனது அம்மா இறந்துவிட்ட காரணத்தினால் நான் சினிமாவை விட்டு விலகி ஆஸ்திரேலியாவில் இருந்த எனது அண்ணன் வீட்டில் தங்கி இருந்தேன்.

தற்சமயம் மீண்டும் நடிக்க துவங்கியிருக்கிறேன் மீண்டும் என்னை திரையில் நீங்கள் பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார் அஞ்சு.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version