அல்லு அர்ஜுன்-க்கு டஃப் கொடுக்கும் அண்ணாச்சி..! – வைரலாகும் லெஜண்ட் சரவணன் மாஸ் போட்டோஸ்..!

தமிழ்நாட்டின் பிரபல தொழிலதிபரும் நடிகருமான தி லெஜன்ட் சரவணன் சமீபத்தில் லெஜன்ட் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் திரைத்துறையில் ஹீரோவாக காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது என்ற தகவல்கள் வெளியாகியது. ஆனாலும் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவர் தற்போது தன்னுடைய தோற்றத்தையே மாற்றி மாஸ் லுக்கில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

கேசரி நிறத்திலான பேண்ட் மற்றும் கோட் அணிந்து கொண்டு கருப்பு நிற சட்டையில் பார்ப்பதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் போல காட்சியளிக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் சினிமா மீதும் நடிப்பின் மீதும் கொண்டிருந்த நீண்டகால ஆவலின் காரணமாக தன்னுடைய கடையின் விளம்பரத்தில் நடிகை தமன்னா ஹன்சிகா போன்ற முன்னணி நடிகைகளுடன் ஆட்டம் போட்டு ரசிகர்கள் மத்தியில் பேமஸானார்.

விளம்பரத் துறையில் புதிய டிரெண்டை உருவாக்கிய இவர் தொடர்ந்து சினிமாவிலும் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இவருடைய தோற்றத்தையும் நடிப்பையும் கலாய்க்கும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இவருடைய வளர்ச்சியை கண்டு வியந்து, அவருக்கு ஆதரவாக இருக்கும் ரசிகர்களும் ஒரு பக்கம் இருக்கவே செய்கிறார்கள்.

சினிமாவில் முழுநேர நடிகராக களம் இறங்கி இருக்கும் லெஜண்ட் சரவணன் தற்போது மாஸ் ஹீரோ லுக்கில் மாஸான போட்டோ சூட் சிலவற்றை நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

ஒரு வேளை இவருடைய அடுத்த படத்தின் தோற்றம் இதுதானா..? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இவர் நடித்திருந்த முதல் திரைப்படம் இயக்குனர்கள் ஜோடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இருந்தனர்.

இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்டேலா ஹீரோயினாக நடித்திருந்தார். இவர் ஹீரோயினாக நடிப்பதற்கு இவருக்கு எட்டு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கும் இவர் உடைய புதிய தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தன்னுடைய அடுத்த படத்திற்காக வெறித்தனமாக தயாராகி வரும் இவர் மாஸ் ஹீரோ லுக்கில் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

குறிப்பாக புஷ்பா படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் சமீபத்தில் நடிப்பில் நடித்திருந்த அலா வைகுண்டபுரமுலோ என்ற திரைப்படத்தில் இதே போன்ற கேசரி கலர் சூட்டில் சில புகைப்படங்களை சில காட்சிகளில் தோன்று இருப்பார்.

அதேபோன்று இடையில் லெஜண்ட் சரவணன் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. முதல் படத்தில் முகத்தில் மீசை கூட இல்லாமல் நடித்திருந்த லெஜன்ட் சரவணன் தற்போது மீசை தாடி என ஆளே மாறி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …