சூரியா ஜோதிகா வாழும் போலியான வாழ்க்கை..! ஜோதிகாவின் வேறு முகம்..! விளாசும் பிரபல நடிகர்..!

தமிழ் திரை உலகில் நட்சத்திர தம்பதிகளாக திகழும் தம்பதிகளில் நடிகர் சூரியா மற்றும் நடிகை ஜோதிகா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இருவருமே தமிழ் திரையுலகில் அளப்பரிய பணிகள் செய்து இருப்பதோடு மட்டுமல்லாமல் பல வெற்றி படங்களை கொடுத்து அதிகளவு ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர்கள்.

சூரியா ஜோதிகா வாழும் போலியான வாழ்க்கை..

மும்பையில் இருந்து தமிழ் துறையில் நடிகையாக அறிமுகம் ஆன ஜோதிகா, சூரியாவோடு இணைந்து காக்க காக்க படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட காதலை அடுத்து பல ஆண்டுகள் காத்திருந்து அதன் பின் தான் பெற்றோர்களது சம்மதத்தை பெற்று சூரியாவை கரம் பிடித்தார்.

மேலும் ஆரம்பத்தில் சூரியாவின் காதலுக்கு சிவப்புக் கொடியை காட்டிய நடிகர் சிவகுமார் தனது மகளின் திருமணம் முடிந்த பிறகு தான் அதை பற்றி யோசிக்க வேண்டும் என்று சொன்னதை அடுத்து தனது சம்பாத்தியத்தில் தங்கைக்கு சீரிய முறையில் திருமணத்தை செய்து முடித்தார்.

அடுத்து கட்டினால் ஜோவை தான் கட்டுவேன் என்று விடாப்பிடியாக இருந்ததை அடுத்து வேறு வழியில்லாமல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இவர்கள் திருமணம் நடந்து முடிந்தது.

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்கக்கூடாது என்பதில் அதிக கட்டுப்பாடுகளை விதித்த சிவகுமாரின் பேச்சை மீறி 36 வயதினிலே படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னதை அடுத்து ஒரு படத்தில் தானே என்று அனுமதி கொடுத்த சிவக்குமார். அதை தொடர்ந்து மீண்டும் பல படங்களில் நடிக்கிறார் என்ற விஷயத்தை கேள்விப்பட்டு காண்டாகிவிட்டார்.

ஜோதிகாவின் வேறு முகம்..

இந்நிலையில் தன் கணவர் மற்றும் குழந்தைகளோடும் மும்பைக்கே குடிபெயர்ந்து சென்ற ஜோதிகா அங்கு ஹிந்தி படங்களில் நடிக்கக்கூடிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவதோடு மட்டுமல்லாமல் நடிகர் சூரியாவையும் ஹிந்தி படங்களில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறார்.

மேலும் தனது கணவருக்கு ஆடம்பர காரை வாங்கி கொடுத்து எப்படியும் அங்கேயே இருந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கக்கூடிய ஜோதிகா தன் மகன் விருது பெற்ற போது அந்த விழாவிற்கு கூட வரவில்லை.

அதுமட்டுமில்லாமல் அண்மையில் நடந்த பட பிரமோஷனுக்கு சென்னை விமான நிலையம் வரை வந்த இவர் அங்கேயே தங்கியிருந்து விட்டு மாமனார் வீட்டுக்கு செல்லாமல் மும்பைக்கு பறந்து சென்றது இணையங்களில் வெளி வந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

விளாசும் பிரபல நடிகர்..

மேலும் சூரியாவின் மகன் டேய் தனது அம்மா எங்கே என்று கேட்கும் போது அதற்கு உரிய பதிலை சூர்யாவால் சொல்ல முடியாமல் உள்ளது. மேலும் அவரது பெற்றோர்கள் கேட்கும் போது என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்கிறார்.

ஜென் அகாடமியில் கராத்தா வகுப்பை படித்த இவர் தனது தாத்தாவைப் போல அடக்க ஒடுக்கமாக எந்த விதமான தலைக்கணமும் இல்லாமல் இருப்பதாக அவர்கள் சொல்லி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்று பயில்வான் சொல்லி இருக்கிறார்.

மேலும் தேர்தலின் போது தளபதி விஜய் ஷூட்டிங் இருந்தாலும் சென்னை பறந்து வந்து வாக்களித்தார். ஜோதிகா சென்னைக்கு வந்து வாக்களிக்காமல் தன் கடமையை மறந்து நின்றார்.

ஜனநாயக கடமையை ஆற்ற சூரியா வந்த நிலையில் ஜோதிகா வரவில்லை. இத்தோடு இல்லாமல் அவர் சென்னை வரவே விரும்புவதில்லை என்ற பகீர் தகவலை சொன்னதோடு தஞ்சை பெரிய கோவிலை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை ஜோதிகாவிற்கு உள்ளது என்ற கேள்வியையும் முன் வைத்து விட்டார்.

இந்த சூழ்நிலையில் ஜோதிகாவின் உண்மையான முகத்தை உரித்து காட்டிய பயில்வான் ரங்கநாதன் பேசிய பேச்சானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version