பிரபல தென்னிந்திய நடிகரான அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷ்-ஐ நடிகை அனு இமானுவேல் காதலித்து வருவதாக கூறப்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை அனு இமானுவேல் தன்னுடைய பதிலை கொடுத்திருக்கிறார்.
தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனவர் நடிகை அனு இமானுவேல்.
அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.
இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் அர்ஜூனின் தம்பி வருகிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியானது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்று கூட ஊடகங்கள் எழுதித் தள்ளின.
இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை அனு இம்மானுவேல் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர் கூறியதாவது, நான் நல்ல விஷயம் படத்தில் சேர்ந்து நடிப்பதற்கு முன் அவரைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது படத்தின் பூஜையின் போது தான் இவரை நான் சந்தித்தேன்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் வைரலாகி வருகிறது. நான் அவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.
எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம். இதனை பார்த்து என்னுடைய அம்மா அழுது விட்டார். ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக காபி கொடுத்தால் கூட இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவி விடுகிறது.
நான் யாரையும் காதலிக்கவில்லை யாருடனும் வாழவும் இல்லை நான் இன்னும் சிங்கிள் தான் என்று கூறுகிறார். இது ஒரு பக்கமிருக்க பாத்ரூமில் அல்லு அர்ஜுனின் தம்பி அவருடன் நெருக்கமாக நின்றபடியே அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்களை இணையத்தில் தீயாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.