தமிழ் சினிமாவின் பலராலும் அறியப்பட்ட ஒரு முகமாக இருப்பவர் நடிகை அனுஹாசன் கலை குடும்பத்தில் பிறந்த இவர் நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை அனுஹாசனுக்கு படிப்பு நடிப்பு இந்த இரண்டுக்கும் அடுத்தபடியாக தற்காப்புக்கலை மிகவும் பிடித்த ஒரு விஷயம். இவர் தற்காப்புக் கலையை முறையாகப் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் இவர் படித்து வந்த பொழுது கூடைப்பந்து அணியில் விளையாடி வந்தார். இவருக்கு இசை மீதும் அலாதி பிரியம் என்கிறார்கள். ஜாஸ் ரக பாடல்களை விரும்பி கேட்கக்கூடிய இவர் ஆடை வடிவமைப்பாளர் ஆகும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்.
தற்போது தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள அதிக ஆர்வத்துடன் இருக்கும் இவர் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.
திருச்சியிலிருந்து கூடிய சென் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த இவர் அதன்பிறகு ராஜஸ்தானில் உள்ள பிட்ஸ் பிலானியில் எம் எஸ் சி பிசிக்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட் படித்து முடித்திருக்கிறார்.
ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் பலராலும் அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய இவர் ஒருமுறை என்னுடைய சிறுவயதில் கோயிலுக்கு சென்றபோது அங்கே ஒரு நபர் என்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டார் அது எனக்கு மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.
ஒரு கோயிலில் வந்து இப்படியான வேலைகளை செய்கிறாரே என்று எனக்கு கடவுளின் மீதும் வெறுப்பு வந்தது அதன்பிறகு நான் கோயிலுக்கு செல்வதில்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் படவிழா ஒன்றில் கலந்து கொண்ட இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.