சத்தியராஜ் எனக்காக அதை வெட்டினார்..! – நடிகை அனுமோல் ஒப்பன் டாக்..!

நடிகை சஜிதா கடந்த 2013ஆம் ஆண்டு ஜோதி இயக்கியிருந்த ஷட்டர் என்ற திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்து சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். இந்த படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றிய இயக்குனர் ஏ எல் விஜய் தன்னுடைய சொந்த பணத்தை போட்டு பிரபல எடிட்டர் ஆன ஆண்டனி என்பவரை இயக்குனராக அமர்த்தி “ஒரு நாள் இரவில்” என்று தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்தார்.

இந்த படத்தில் ஹீரோவாக சத்யராஜ் நடிக்க ஹீரோயினாக நடிகை அனுமோல் நடித்தார். தன் வீட்டின் எதிரில் உள்ள ஷட்டர் போடப்பட்ட கடைக்குள் தன்னுடைய அல்ப்ப புத்தியால் விலைமாதுவுடன் சிக்கிக்கொள்ளும் ஹீரோ விடியவிடிய அந்த கடைக்கு உள்ளேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

இந்நிலையில் ஹீரோவை காணவில்லை என்று அவருடைய குடும்பத்தார் தேடுகின்றனர். வீட்டின் எதிரிலேயே அந்த கடைக்குள் இருக்கும் ஹீரோ எப்படி இந்த சூழ்நிலையை சமாளித்தார் என்பதும் இறுதியில் என்ன ஆனது என்பதுதான் இந்த படத்தின் மீதி கதை.

நொடிக்கு நொடி சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் இந்த கதை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்று தான் கூற வேண்டும்.

இந்த படத்தில் விலைமாதுவாக நடித்திருந்த அனுமோல் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதில் அவர் கூறியதாவது, ஒருநாள் இரவில் படத்தின் கதையை கேட்டதும் மிகவும் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

படத்தின் சூட்டிங் முழுதும் தூசு படிந்த ஷட்டர் போட்ட ஒரு சிறிய இடத்தில் தான் நடந்தது. அப்போது எனக்கு எதுவும் பெரிதாக தெரியவில்லை. ஆனால் சில நாட்கள் கழித்து எனக்கு கடுமையான டஸ்ட் அலர்ஜி ஏற்பட்டது. அதன் பிறகு முறையான சிகிச்சை பெற்றுக்கொண்டு குணமானேன்,

சத்தியராஜ் போன்ற நடிப்பு ஜாம்பவான் உடன் நடிக்கும் பொழுது நடிக்கிறோம் என்ற பயம் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. நான் நடிக்கும் கேரக்டரை விட நீ நடிக்கும் இந்த கேரக்டர் தான் பேசப்படும் என்று என்னிடம் கூறிக்கொண்டே இருந்தார்.

என்னை மிகவும் பாதுகாப்பாக பார்த்துக் கொண்டார். முக்கியமாக என் முகத்தில் துணியால் இறுக்கி கட்டும் ஒரு காட்சியில் முகத்தில் நகத்தின் கீறல் விழுந்து விடக்கூடும் என்ற காரணத்தினால் அந்த காட்சியில் நடிப்பதற்கு முன்பு அவருடைய நகங்கள் அனைத்தையும் வெட்டி விட்டு வந்து நடித்தார்.

வழக்கமாக உடன் நடிக்கும் நடிகைகள் நடிகர்கள் கொடுத்து யாரும் இப்படி கேரிங் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் நடிகர் சத்யராஜ் என்னை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டார் என்று கூறியுள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …