படப்பிடிப்பில் விபத்து.. அந்த உறுப்பில் மிதித்த வில்லன்.. நிலை குலைந்த நடிகர் சூரியா..!

சூர்யா நடித்த திரைப்படங்களில் அவருக்கு மாஸ் ஹிட் கொடுத்த திரைப்படங்கள் நிறைய இருக்கின்றன. அப்படி வரிசைப்படுத்தும் படங்களில் ஆக்ஷன் படங்கள் என்று லிஸ்ட் எடுத்தால் அதில் சிங்கம் திரைப்படத்திற்கு முக்கியமான பங்கு இருக்கும்.

சிங்கம் பாகம் 3 எடுக்கும் பொழுது சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதனை குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது சிங்கம் 3 திரைப்படத்தில் அனுப்சிங் எனும் நபர்தான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார்.

சிங்கம் 3 படப்பிடிப்பு:

அவருக்கு சிங்கம் 3 திரைப்படம் தான் முதல் திரைப்படம் ஆகும். அதற்கு முன்பு வட இந்தியாவில் நாடகங்களில் நடித்து வந்தவர் அனுப்சிங். அதனால் ஒரு பதட்டத்திலேயே சிங்கம் 3 திரைப்படத்தில் அவர் நடித்து வந்தார். இந்த நிலையில் கிளைமாக்ஸ் கட்சியில் சூர்யாவுடன் அனுப்சிங்குக்கு சண்டை காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது.

அப்பொழுது ஒரு காட்சியில் அனுப் சிங் சூர்யாவின் நெஞ்சில் ஓங்கி மிதிக்க வேண்டும் அந்த காட்சியை படமாக்கும் பொழுது சூர்யாவிற்கு கயிறு எதுவும் கட்டப்படவில்லை ஏனெனில் அந்த காட்சி மிகவும் இயற்கையாக இருக்க வேண்டும் என்று சூர்யாவே கயிறு மாதிரியான விஷயங்கள் எல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

இந்த நிலையில் அந்த காட்சி படமாக்கப்படும் பொழுது ஓடிவரும் அனுப்சிங் சூர்யாவை உதைக்கும் முன்பு சற்று தயங்கினார். அதை பார்த்து நெஞ்சை கடுமையாக வைத்திருந்த சூர்யா தயங்குகிறார் என்றதும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனார்.

எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம்:

அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஓங்கி உதைத்து விட்டார் அனுப்சிங் அதனால் சூர்யாவிற்கு பயங்கர காயம் ஏற்பட்டதாக கூறுகிறார் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு. ஆனால் அந்த காட்சி எடுக்கப்பட்ட பிறகும் கூட அவர் அனுப் சிங் மீது துளி கூட கோபப்படவில்லை.

மாறாக அவரை அழைத்து கொஞ்சம் கேர்ஃபுல்லாக நீங்கள் அந்த காட்சியை செய்திருக்கலாம் என்று மட்டும்தான் கூறியிருக்கிறார். பிறகு இது குறித்து ஃபைட் மாஸ்டரான கனல் கண்ணன் சூர்யாவிடம் கேட்ட பொழுது ஏன் அந்த காட்சியில் நீங்கள் கோபப்படவில்லை யாராக இருந்தாலும் அப்பொழுது கோபப்பட்டு இருப்பார்களே என கேட்டிருக்கிறார்.

அதற்கு பதில் அளித்த சூர்யா எனது முதல் திரைப்படமான நேருக்கு நேர் திரைப்படத்தில் இதேபோல விஜயை ஓங்கி உதைக்கு காட்சி ஒன்று எனக்கு இருந்தது. அப்பொழுது நானும் இதே போல எதிர்பாராதவிதமாக ஓங்கி உதைத்து விட்டேன். அப்பொழுது விஜய் என்னை திட்டவில்லை இதேபோல தோளில் தட்டிக் கொடுத்து அடுத்த முறை ஒழுங்காக நடிக்க சொல்லி கூறினார்.

அதே அனுபவத்தை தான் நான் அனுப்சிங்கிருக்கும் கொடுத்திருக்கிறேன் ஒருவேளை நான் அனுப் சிங்கை திட்டி இருந்தேன் என்றால் அவர் பிறகு ஒழுங்காக நடிக்க மாட்டார் என கூறி இருக்கிறார் சூர்யா

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version