ஜாடிக்கு ஏத்த மூடி.. துருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை.. யாருன்னு பாருங்க..

தமிழ் சினிமாவில் துவக்கத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்தவர் விக்ரம். அதன்பிறகு பல படங்களில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பணிசெய்தவர் விக்ரம்.

விக்ரம்

ஷங்கர் இயக்கத்தில் காதலன் படத்தை இப்போது பார்க்க வாய்ப்பு நேர்ந்தால் கவனித்து பாருங்கள். அதில் பிரபுதேவாவின் குரலில் பேசியிருப்பது நடிகர் விக்ரம்தான்.

டைரக்டர் பாலா இயக்கிய சேது படத்துக்கு பிறகு சியான் விக்ரம், சினிமா பயணம் வேறு பாதைக்கு மாறியது. பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக மாறினார்.

குறிப்பாக சாமி, அந்நியன், ஐ, கந்தசாமி, தூள் போன்ற படங்களுக்கு பிறகு ஆக்சன் ஹீரோவாக மாறி அசத்தினார். இடையே காசி போன்ற படங்களிலும் நடித்து தன் அபூர்வ கலைத்திறமையை வெளிப்படுத்தினார்.

உடலை வருத்தி

உலகநாயகன் கமலுக்கு பிறகு நடிப்புக்காக அதிக மெனக்கெடுபவர், தன் கேரக்டருக்காக உடலை வருத்திக் கொள்பவர் நடிகர் சியான் விக்ரம்தான். புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதை போல, அவரது மகன் துருவ் விக்ரம், நல்ல நடிகராக தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.

துருவ் விக்ரம்

ஆதித்ய வர்மா படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் விக்ரம் மகன் துருவ் விக்ரம். முதல் படத்திலேயே மிக அட்டகாசமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தினார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த படம் மகான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் தனது முதல் படமான ஆதித்ய வர்மா படத்தில், கல்லூரி மாணவர் கேரக்டரில், நடித்திருப்பார் துருவ் விக்ரம். இதில் பல காட்சிகளில், அவரது வேகமும், கோபமும் சண்டை காட்சிகளிலும் அப்படியே அவரது அப்பா சியான் விக்ரமை பார்ப்பது போலவே இருந்ததாக ரசிகர்கள் பீல் செய்தனர்.

அந்த படத்தில் சிகரட் பிடிக்கும் காட்சிகளில் கூட தனது அப்பாவின் மேனரிசத்தை அப்படியே வெளிப்படுத்தி இருந்தார் துருவ் விக்ரம்.

தன் காதலி மீதுள்ள அன்பை பல இடங்களில் அவர் வெளிப்படுத்த முடியாமல் தவிப்பதும், பிறகு காதலி வீட்டில் போய் சண்டையிடுவதும் என பல காட்சிகளில் தன் அற்புத நடிப்பாற்றலை அவர் வெளிப்படுத்தி இருந்தார்.

இதையும் படியுங்கள்: ஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆகாதும்மா.. சுந்தரி சீரியல் நடிகை நீச்சல் உடையில் வேற லெவல் போஸ்..

கபடி விளையாட்டை

அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி விளையாட்டை மையமாக கொண்ட ஒரு படத்தில், துருவ் விக்ரம் நடிக்க இருக்கிறார். அதற்காக அவர் பல மாதங்களாக கபடி பயிற்சி எடுத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது துவங்க உள்ளது.

அனுபமா பரமேஸ்வரன்

இந்த படத்தில் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே தனுஷூடன் கொடி படத்திலும், சமீபத்தில் வெளியான சைரன் படத்திலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: அந்த கவர்ச்சியா சிலையா மாறிடுச்சா.. தாறுமாறு உடையில் திணறவிடும் ஹன்சிகா..!

இந்த படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் அப்லோஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர்.

ஜாடிக்கு ஏத்த மூடி போல, துருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் இளமையான மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் என்பதால், படத்துக்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்து துவங்கி விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version