நடிகை அனுஷ்கா திருமணம்..! மாப்பிள்ளை இவரா..? என்ன கொடுமை இது..? ரசிகர்கள் ஷாக்..!

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்திருக்கும் நடிகை அனுஷ்கா செட்டி சில மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் முதல் முதலாக 2005 – ஆம் ஆண்டு நாகார்ஜுனாவுடன் இணைந்து நடித்த சூப்பர் என்ற திரைப்படம் தெலுங்கு திரையுலகில் இவரை அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தியது.

நடிகை அனுஷ்கா..

இதனை அடுத்து தமிழில் 2006-இல் ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் ஜோடி போட்டு நடித்த இவர் 40-க்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கும் நடிகையாவார்.

இவர் நடிப்பில் வெளி வந்த அருந்ததி திரைப்படம் இவரை ஒரு மிகச் சிறந்த நடிகையாக வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் நல்ல ரிச்சையும் புகழையும் பெற்று தந்தது.

மேலும் தேவசேனாவாக பாகுபலி திரைப்படத்தில் நடித்த நடிப்பு இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இதனை அடுத்து மாறுபட்ட கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அனுஷ்கா திருமணம்..

இடையில் உடல் எடை அதிகரித்து காணப்பட்டதை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் குறைந்து போக ஆரம்பித்தது. இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருக்கும் அனுஷ்காவின் திருமணம் பற்றி தற்போது செய்திகள் கசிந்து வருகிறது.

இதனை அடுத்து நடிகை அனுஷ்கா ஒரு பிரபல இயக்குனரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வேகமாக பரவி வருகிறது. அது பற்றி தற்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தெலுங்கு திரையுலகில் கணக்கு என்று ஓர் இடத்தை பிடித்து இருக்கும் நடிகர் பிரபாஸை காதலிப்பதாக பரவி வந்த கிசுகிசுக்களை அடுத்து தற்போது ஏற்கனவே திருமணம் ஆகி பிரிந்த பிரபலத்துடன் நடிகை அனுஷ்காவிற்கு திருமணம் என்ற செய்தி வெளி வந்துள்ளது.

தமிழ் திரையுலகில் வேட்டைக்காரன், சிங்கம் போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதோடு அதிக அளவு ரசிகர்களையும் பெற்றிருக்கும் இவர் வானம் மற்றும் தெய்வத்திருமகள் போன்ற படங்களில் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடித்தார்.

மாப்பிள்ளை இவரா?

இதனை அடுத்து வரலாற்று திரைப்படங்களில் நடித்த அவர் இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்திற்காக உடல் எடையை அதிகரித்துக்கொண்டதன் மூலம் திரைப்படங்களில் அதிக அளவு நடிக்கக் கூடிய வாய்ப்பை இழந்துவிட்டார்.

இந்நிலையில் பாகுபலி திரைப்படத்தில் நடித்த பிரபாஸ் இவரும் காதலித்து வருவதாகவும் கடந்த ஆண்டு திருமணங்கள் முடிந்து விட்டதாகவும் செய்திகள் பரவியதை அடுத்து இது குறித்து இவர்கள் மறுப்பு தெரிவித்து செய்திகளை வெளியிட்டு இருந்தார்கள்.

பிரபல இயக்குனர் ராகவேந்திரா ராவின் மகன் பிரகாஷை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.

இவர் வேறு யாரும் இல்லை 2011-ஆம் ஆண்டு அனுஷ்கா நடித்த இஞ்சி இடுப்பழகி படத்தின் இயக்குனர் என்பது பலருக்கும் தற்போது தெரிய வந்துள்ளது.

இவர் திருமணம் செய்து கொள்ள போகக் கூடிய பிரகாஷ் ஏற்கனவே திருமணம் ஆனவர். 2017 – ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்த இவர் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்பட்ட நிலையில் 2020-ஆம் ஆண்டிலேயே இவர்கள் திருமணம் செய்து கொள்ள போவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஆண்டில் இறுதிக்குள் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற செய்திகள் கசிந்து உள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை இயக்குனர் பிரகாஷோ அல்லது அனுஷ்காவோ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. ஊந்த விஷயமானது இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருள் ஆக்கிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version