பிரபாஸ் கண்டிப்பாக எனக்கு சகோதரர் இல்லை.. இது தான் எங்கள் உறவு..! வெளிப்படையாக கூறிய அனுஷ்கா ஷெட்டி..!

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் நடித்து தனது நடிப்பை அழகாக வெளிப்படுத்தியவர் அனுஷ்கா ஷெட்டி. மலையாள மற்றும் ஹிந்தி ரீமேக் படங்களிலும் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்திருக்கிறார்.

அனுஷ்கா ஷெட்டி..

நல்ல உயரமான உடல்வாகோடு பார்ப்பவர்களை கவர்ந்து விடக்கூடிய  லட்சணத்தோடு திகழும் அனுஷ்கா ஷெட்டி 2005 ஆம் ஆண்டு நாகார்ஜுனன் இணைந்து நடித்த சூப்பர் எனும் திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை திரையுலகில் பெற்றுத்தந்தது.

இதனை அடுத்து சில தெலுங்கு படங்களில் நடித்த இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளி வந்த ரெண்டு திரைப்படத்தில் மாதவன், ரீமாசென் ஆகியோரோடு நடித்த இந்த படம் 2006 இல் வெளி வந்தது.

தமிழ் சினிமாவில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் அதிக அளவு ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வரும் இவர் சூப்பர் ஸ்டாருடன் லிங்கா, தளபதி விஜய் உடன் வேட்டைக்காரன், அஜித்துடன் என்னை அறிந்தால், சூர்யாவுடன் சிங்கம் விக்ரமுடன் தெய்வத் திருமகள், தாண்டவம், சிம்புவுடன் வானம், நடிகர் ஆர்யாவுடன் இரண்டாம் உலகம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டார்.

தற்போது பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் உடல் எடை அதிகமாகவும் இருந்தது. அந்த உடல் எடையை தற்போது உடற்பயிற்சியின் மூலம் குறைத்து இருக்கக்கூடிய அனுஷ்கா பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் எழுந்து வருகிறது.

குறிப்பாக நடிகர் பிரபாஸுடன் இவர் காதலில் இருப்பதாகவும், அடிக்கடி வெளியே சென்று வருவதாகவும், அக்கட தேசத்திலும், தென்னிந்திய திரை உலகிலும் அடிக்கடி செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

பிரபாஸ் – அனுஷ்கா உறவு..

இந்நிலையில் தற்போது அனுஷ்கா நடிகர் பிரபாஸ் குறித்து சில விஷயங்களை வெளிப்படையாக கூறி இருக்கிறார். அதில் பிரபாஸ் தனக்கு கண்டிப்பாக சகோதரர் இல்லை என்பதை ஆணித்தரமாக வெளிப்படுத்துகிறது. அடுத்து என்ன தான் இவர்கள் உறவு என்பதை பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமானார்கள்.

இவர்கள் இருவரும் படங்களில் இணைந்து நடித்திருந்தாலும், இவர்களது உறவு எப்போதுமே ஒரு நண்பர்களுக்கு இடையே இருக்கக்கூடிய உறவைப் போல நட்புடன் தான் இன்று வரை உள்ளது என்பதை உறுதிபட தெரிவித்துவிட்டார்.

இதனை அடுத்து பிரபாஸ் மற்றும் அனுஷ்காவின் உறவு என்பது நட்பு ரீதியில் தான் உள்ளது என்று வெளிப்படையாக கூறிய அனுஷ்காவின் பேச்சைக் கேட்டு ரசிகர்களுக்கு சப் என்று ஆகிவிட்டது.

எத்தனையோ கிசுகிசுக்களை படித்து மதி மயங்கி இருந்த ரசிகர்கள் அனைவரும் இவர்களுக்கு இடையே இருக்கக்கூடிய உறவை நட்பு என்று ஒற்றை வார்த்தையில் கூறி அனைவரும் அப்படியே திணற வைக்க கூடிய வகையில் சொல்லி விட்டாரே என்று ரசிகர்கள் துடித்து விட்டார்கள்.

மேலும் இது போலத்தான் சூர்யா மற்றும் ஜோதிகாவின் காதல் பற்றி பரபரப்பாக செய்திகள் வெளி வந்த போதும் இருவரும் அது பற்றி எதுவும் கூறாமல் மௌனமானக இருந்த சூழ்நிலையில் திடீரென்று திருமணத்தை அறிவித்தார்கள்.

அது போல பிரபாஸ் மற்றும் அனுஷ்கா விஷயத்திலும் நடக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றத்தை தரக்கூடிய வகையில் அவரது பேட்டி இருந்தது.

இந்த பேட்டியில் அவர்களது காதல் பற்றி எந்த ஒரு விஷயத்தையும் பகிராமல், இருவருடைய இருக்கும் உறவு நட்பு மட்டுமே என்று பகிரங்கமாக கூறிய பேச்சு இணையத்தில் அதிகளவு பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் எதையோ எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இவரது பேச்சு பெருத்த ஏமாற்றத்தை தந்து விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version