நடிகை அனுஷ்கா பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகையாக உருவெடுத்தார். ஆனால் உடல் எடை கூடி குண்டாகி போனதால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இருந்தாலும் பாகமதி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து சினிமாவிலிருந்து விலகி திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிடலாம் என்று யோசித்து இருந்தார் நடிகை அனுஷ்கா.
ஆனால் அவருடைய சொந்த ஜாதக கிரக நிலைகள் இவருடைய திருமணத்தை தடுக்கிறது என்றும் இதற்காக நடிகை அனுஷ்கா பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்றும் இவருடைய குடும்ப ஜோதிடர்கள் சொல்லியதற்கு அற்ப பல திருத்தலங்களுக்குச் சென்று பரிகார பூஜைகளை செய்தார் நடிகை அனுஷ்கா.
ஆனால் இதுவரை அவருக்கு திருமணம் ஆகவில்லை மேலும் நடிகர் பிரபாஸுடன் இவர் காதலில் இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன ஆனால் இந்த தகவலை நடிகை அனுஷ்காவோ நடிகர் பிரபாஸ் இதுவரை மறுக்கவில்லை.
அதே சமயம் நடிகர் பிரபாஸும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றார் எனவே இருவரும் காதலிக்கிறார்கள் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்களால் நம்பப்படுகிறது.
ஆனால், மறுபக்கம் நடிகை அனுஷ்காவிற்கு திருமணம் செய்தால் அவருடைய வாழ்க்கை சிக்கலில் இருக்கும் என்று அவருடைய குடும்ப ஜோதிடர் கூறியதன் பெயர்தான் இவருடைய திருமணம் தடைபடுகிறது என்றும் இதனால் மணமுடைந்த நடிகை அனுஷ்கா திருமணமே வேண்டாம் என்ற முடிவில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்ன நடக்கப்போகிறது என்பதை பொருத்தது தான் பார்க்க வேண்டும் இந்நிலையில் சினிமாவில் பிஸியாக இருந்தபோது நடிகை அனுஷ்கா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு சொல்லிவிட்டு வருகின்றனர்.