43 வயசாகியும்.. முரட்டு சிங்கிள்.. அனுஷ்காவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?

யோகா ஆசிரியராக தனது வாழ்க்கையை துவங்கி அதன்பிறகு நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் பிரபலமாகி உச்சத்தை தொட்ட நடிகை தான் நடிகை அனுஷ்கா செட்டி.

கர்நாடகா மாநிலம் மங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் முதன் முதலில் கடந்த 2005 ஆம் ஆண்டு பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளிவந்த தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார் .

அனுஷ்கா ஷெட்டியின் அறிமுகம்:

இதுதான் அவரது முதல் திரைப்படம் கூட “சூப்பர்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். முதல் படத்தின் பெயரை போலவே முதல் திரைப்படமும் அனுஷ்காவுக்கு சூப்பர் ஹிட் அடித்தது.

அவருக்கு தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் சுந்தர் சி. தான் அனுஷ்கா ஷெட்டியை அறிமுகம் செய்து வைத்தார் .

ஆம், அவர் இயக்கிய ரெண்டு திரைப்படத்தின் மூலமாகத்தான் அனுஷ்கா கோலிவுட்டில் அறிமுகமாகி இருந்தார் .

அதன் பிறகு விஜய்க்கு ஜோடியாக வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம், அஜித்தின் ஜோடியாக என்னை அறிந்தால், ரஜினியுடன் லிங்கா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டார் அனுஷ்கா.

ஹிந்தி தமிழ் என இப்படி பல்வேறு திரைப்படங்களில் நடித்தாலும் அனுஷ்காவுக்கு மிகப்பெரிய வரலாற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது என்னவோ “அருந்ததி’ திரைப்படம் தான்.

திருப்புமுனையாக அமைந்த பாகுபலி:

அந்த திரைப்படத்தில் கதையின் கதாநாயகியாகவே இவர் நடித்திருப்பார். மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

அதை எடுத்து பாகுபலி திரைப்படம் மீண்டும் அவருக்கு இரண்டாவது பெரிய வெற்றியை தேடித்தந்தது.

இது இரண்டுமே வரலாற்று கதை அம்சம் கொண்ட திரைப்படங்கள் என்பதால் இந்த படத்தில் தன்னுடைய அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரையும் கவர்ந்தார் அனுஷ்கா.

பாகுபலி படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக தேவசேனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த அனுஷ்காவின் சிறந்த நடிப்பை பார்த்து எல்லோரும் மெர்சல் ஆகிப் போய் விட்டனர்.

இப்படி அவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்த சமயத்தில் திடீரென இஞ்சி இடுப்பழகி என்கிற படத்தில் தனது உடல் எடையை அதிகரித்துக் கொண்ட அனுஷ்காவுக்கு அதன் பின்னர் உடல் எடையை குறைக்கவே முடியாமல் மிகவும் அவதிப்பட்டார் .

மருத்துவர் ரீதியாக சிகிச்சை எடுத்தும் அவரால் உடல் எடை குறைக்க முடியவில்லை. இதனால் அவரது மார்க்கெட் சரிந்து போய்விட்டது.

43 வயசாகியும்.. முரட்டு சிங்கிள்:

அதன் பிறகு அவருக்கு பெரிதாக வெற்றி படமாக எதுவும் அமையவில்லை. 43 வயசாகியும்.. முரட்டு சிங்கிளாக இருக்கும் அவர் அவ்வப்போது காதல் கிசுகிசுக்களில் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் .

பிரபாஸ் மற்றும் பிரபலமான தொழிலதிபர் ஒருவருடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். அவர்களை திருமணம் செய்து கொள்ள போவதாக கூட செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

ஆனால், எல்லாவற்றிற்கும் அவர் மௌனம் காத்தே முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

சொத்து மதிப்பு:

கிட்டதட்ட ரூ.130 கோடி சொத்து இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு படத்திற்கு மட்டும் ரூ. 5 கோடி சம்பளம் வாங்கும் அனுஷ்கா செட்டி விளம்பரங்களில் நடிக்க ரூ. 1கோடி சம்பளம் வாங்குகிறார்.

இது தவிர சென்னை , மங்களூர் , ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் சொகுசு வீடுகளும் பல லட்சரி கார்களையும் அடுக்கி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version