பொண்டாட்டி மெட்டீரியல் வேணுமா..? – கிளுகிளு போஸ் கொடுத்து இணையத்தை கிடுகிடுக்க வைக்கும் அனுயா..!

பிரபல நடிகை அனுயா கடந்த 2009ஆம் ஆண்டு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்த திரைப்படம் முழு நீள காமெடி திரைப்படமாக வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதன் மூலம் நடிகை அனுயா அவருக்கும் நிறைய ரசிகர்கள் கிடைத்தனர் இந்த திரைப்படத்தின் வரவேற்பு இவருக்கு மேற்கொண்டு பல பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது.

இதனைத்தொடர்ந்து மதுரை சம்பவம் என்ற திரைப்படத்தில் நடித்தார் நடிகை அனுயா அதன் பிறகு நகரம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவருக்கு தொடர்ந்து கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஒருகட்டத்தில் துணை நடிகையாகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் நடிகை அனுயா நண்பன் உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாக நடித்தார். இப்படி இருந்த நடிகை அனுயாவை மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது சுச்சி லீக்ஸ் சர்ச்சை.

இந்த சர்ச்சையில் சிக்கிய நடிகை அனுயா ஆம் அந்த புகைப்படத்தில் இருப்பது நான் தான். இதனை கலை கண்ணோட்டத்துடன் பார்த்து ரசிக்க வேண்டும் அதற்கு பதிலாக மோசமான எண்ணத்துடன் பார்த்தால் மோசமாகத் தான் தெரியும். நான் ஒரு நடிகை சினிமா மற்றும் கலை சார்ந்த துறையில் வேலை செய்பவள்.

இதனை கலை கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்களுக்கு அதில் ஆபாசம் தெரியாது என்று அடடே விளக்கம் கொடுத்து ரசிகர்களை ஒரு நிமிடம் ஷாக்காக வைத்தார் நடிகை அனுயா.

அதன்பிறகு கடந்த 2011ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு முதல் ஆளாக வெளியேறினார் நடிகை அனுயா.

அதனைத் தொடர்ந்து வேறு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த இவர் தற்போது மராத்தியில் சீரியல்களில் நடித்து வருகிறார். சீரியலில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய இணையத்தில் பகிர்ந்து வரும் அனுயா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …