ஆள் இல்லாத இடத்துல வச்சி பாக்கணும் போல இருக்கே..! – ஆளை மயக்கும் அபர்ணா பாலமுரளி..!

சூரரைப் போற்று படத்தில் நடித்தவர் அபர்ணா பாலமுரளி (Aparna Balamurali, )நல்ல நடிகை என்பதற்கு, இந்த படம் ஒன்றே போதுமானது. மலையாளம், தமிழ் படங்களில் வளர்ந்து வரும் நடிகையாக, நடித்து வருகிறார்.இவர், பின்னணி பாடகியாகவும் இருக்கிறார் என்பது, பலரும் அறியாத விஷயம்.

மலையாளத்தில் ‘மகேசிண்ட பிரதிகாரம்’, என்ற படத்தில், 2016ம் ஆண்டில் ‘ஜிம்ஸி’ என்ற கேரக்டரில் அபர்ணா அறிமுகமானார்.அடுத்து, 2017 ல் வெளியான சண்டே ஹாலிடே படத்தில் அனு என்ற கேரக்டரில் நடித்தார். இந்த இரண்டு படங்களிலும் ஜிம்ஸி, அனு கேரக்டர்களில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால், இவர் ரசிகர்களின் மத்தியில் மிக பிரபலமானார்.

அபர்ணா பாலமுரளி

அபர்ணா பாலமுரளியின் சொந்த ஊர், கேரளா மாநிலம் திருச்சூர். இவர் பிறந்தது இங்குதான். இவரது பெற்றோர்பாலமுரளி – ேஷாபாஅபர்ணாவின் தந்தை, பாலமுரளி இசை இயக்குநராக, பல படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். வழக்கறிஞராக உள்ள அபர்ணாவனின் அம்மா, மலையாள படங்களில் பாடி இருக்கிறார். அபர்ணாவுக்கு, பாடகர் இசையமைப்பாளரான கே பி உதயபானு, தந்தைவழி பெரிய மாமா உறவாக இருக்கிறார்.

நடிப்பு மட்டுமின்றி இந்திய பாரம்பரிய இசை கற்றவர் அபர்ணா பாலமுரளி. அத்துடன் பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி நடனம் என முறைப்படி பயிற்சி பெற்றவர். பாலக்காட்டில் உள்ள பிரபலமான கட்டிடக்கலை நிறுவனத்தில் படித்தவர் இவர்.

அபர்ணா பாலமுரளி

கடந்த 1995 ம் ஆண்டில் பிறந்த அபர்ணாவுக்கு, 28 வயதுகள் ஆகிறது. எனினும், மெச்சூரிட்டியாக நடந்துகொள்பவர் என்பதற்கு உதாரணமாக, சமீபத்தில் கேரளாவில் கல்லூரி வளாகத்தில் நடந்த படவிழா ஒன்றில், அங்கிருந்த மாணவர், மேடையேறி அபர்ணா பாலமுரளியில் தோளில் கைபோட முயன்றது பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது. செல்பி எடுப்பது போன்று நடந்துகொண்ட அந்த வாலிபரை, பார்வையாலேயே மிரட்டியவர் என, ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

தமிழில், அபர்ணா பாலமுரளி நித்தம் ஒருவானம், வீட்ல விசேஷம், தீதும் நன்றும், சூரைப் போற்று, சர்வம் தாளமயம், 8 தோட்டாக்கள் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இதில் சில படங்கள் மிகச்சிறந்த படங்களாக, அபர்ணா பாலமுரளியின் நடிப்பை, கேரக்டரை மிக கவனித்து ரசிக்கும் படங்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அபர்ணா பாலமுரளி

குறிப்பாக, ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடித்த வீட்ல விசேஷம் படத்தில், மெட்ரிக் பள்ளி நடத்தும் அபர்ணா பாலமுரளி, தன் அம்மாவுக்காக பேசும் காட்சியிலும், வயதான காலத்தில், ஊர்வசி கர்ப்பமாக இருக்கிறார் என வருத்தப்படும் அவரது மகன் ஆர்ஜே பாலாஜியிடம் பேசும் காட்சியிலும் நல்ல நடிப்புத்திறனை வெளிப்படுத்தி இருப்பார். ஆர்ஜே பாலாஜியை அவரது வீட்டுக்கு சென்று பார்க்கும் காட்சியிலும் நன்றாக நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சூரரைப்போற்று படத்திலும் சூர்யாவின் மனைவியாக பல இடங்களில் தனது முத்திரை நடிப்பை தந்திருப்பார் அபர்ணா.

அபர்ணா பாலமுரளி

சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் அவர், அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். ரசிகர்களும் அதற்கு லைக்குகளை அள்ளித் தருகின்றனர். லேட்டஸ்ட் ஆக வந்துள்ள அபர்ணா புகைப்படங்களை பாருங்க, அசந்துடுவீங்க… மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …