ஓமனில் குடியேறிய மலையாளி பெற்றோர்களுக்கு பிறந்த அபர்ணாதாஸ் ஆரம்பக் கல்வியை முடித்த பிறகு கோவையில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டப் படிப்பை படித்தவர். முதுகலை பட்டப்படிப்பை முடித்த இவர் ஒரு கணக்காளராக பணியாற்றி இருக்கிறார்.
மேலும் மஸ்கட்டில் பணி புரியும் சமயத்தில் டிக் டாக் வீடியோ ஒன்றை பார்த்த பிறகு இவரை திரைப்படத்தில் நடிப்பதற்காக அழைத்திருக்கிறார்கள்.
நடிகை அபர்ணாதாஸ்..
டிக் டாக் மூலம் சினிமா வாய்ப்பை பெற்ற அபர்ணாதாஸ் நகைச்சுவை திரைப்படமான நான் பிரகாஷனில் என்ற திரைப்படத்தில் 2018 ஆம் ஆண்டு நடித்தார். இதனை அடுத்து இவர் 2019-ல் மனோகரம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் கவர்ந்து விட்டார்.
இதையும் படிங்க: “அப்டியா..?..” தளபதி விஜய் குறித்த கேள்வி.. பங்கமாக கலாய்த்த செய்த ஜெயம் ரவி..
மலையாள படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தமிழ் திரைப்படத்தில் 2022-இல் பீஸ்ட் படத்தில் நடித்து தமிழக இளைஞர்களையும் கொள்ளை அடித்த இவர் தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார்.
அந்த படம் காட்டிய நண்பன்..
இதை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் பேசிய அபர்ணாதாஸ் தன்னுடைய நண்பன் தன்னை படம் பார்க்க கூட்டி சென்று விட்டு அது மாதிரியான படத்தை காட்டியதாக சொல்லி பகிர் விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றே கலந்து கொண்ட நடிகை அபர்ணாதாஸ் இடம் ஏதாவது ஒரு படத்திற்கு சென்று ஏண்டா இந்த படத்துக்கு சென்றோம் என்று நீங்கள் நினைத்தது உண்டா? அல்லது இடைவெளியின் போது திரை அரங்கை விட்டு வெளியே வந்த சம்பவம் ஏதாவது நடந்து உள்ளதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு சற்றும் அசராமல் பதிலளித்த அபர்ணாதாஸ் ஆம் என்று பதில் அளித்ததோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து பேசிய அவர் பொதுவாக எந்த படமாக இருந்தாலும் முழுதாக நான் பார்க்க வேண்டும் என்று தான் நினைப்பேன்.
இதையும் படிங்க: கலகலப்பு 3யில் இவரு ஹீரோவா..? காமெடி பண்ணாதிங்க.. மறுத்த சுந்தர் சி..!
ஏனெனில் முதல் பாதியை மட்டும் பார்த்துவிட்டு படம் எப்படி உள்ளது என்பதை எப்போதும் நாம் முடிவு செய்து விட முடியாது. திரைப்படம் எனும் படைப்பை முழுமையாக பார்க்க வேண்டும். அதில் எனக்கு எந்தவிதமான மாற்றும் கருத்தும் கிடையாது.
ஆனாலும் ஏன் அந்த படத்தில் இடைவெளியின் போது நான் வெளி வந்தேன் என்பது பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அந்த வகையில் என்னுடைய நண்பர் ஒருவர் என்னை படம் பார்க்க அழைத்துச் சென்றார்.
ஆனால் அந்த படமானது ஆண், பெண் என்று நண்பர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய படம் அல்ல. உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். அந்தப் படத்தைப் பார்க்க எனக்கு துளி கூட விருப்பமில்லை. இதன் காரணமாகத்தான் நான் இடைவேளியின் போதே வெளியே வந்து விட்டேன்.
மற்ற படி எந்த படமாக இருந்தாலும் இந்த செயலை நான் செய்ய மாட்டேன். படத்தை முழுமையாக பார்ப்பேன். அத்தோடு அதில் இருக்கும் நிறை, குறைகளை தெரிந்து கொண்டால் தான் நம்முடைய படங்களிலும் அதை சரியாக செய்ய முடியும் என்பது என்னுடைய கருத்து.
எனவே அன்று அந்த நண்பர் கூட்டி சென்று அவரோடு பார்த்த படம் பார்க்கக்கூடிய படமாக இல்லை. எனவே தான் நான் இடையிலேயே வந்துவிட்டேன் என்று ஓபனாக பதில் தந்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வியந்து அவரை பாராட்டி இருக்கிறார்கள்.