இப்படித்தான் என்னை கவுத்தார்.. கணவர் காதல் குறித்து நடிகை அபர்ணா தாஸ்..!

மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை அபர்ணாதாஸ் 2018 – ஆம் ஆண்டில் வெளி வந்த நான் பிரகாஷ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார்.

இவர் 1995 ஆம் ஆண்டு பிறந்தவர். ஓமனில் குடியேறிய மலையாளி குடும்பத்தைச் சேர்ந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை நெம்மாராவில் இருக்கும் கங்கோத்ரி ஆங்கில வழி பள்ளியில் கற்று இருக்கிறார். இதனை அடுத்து கோவையில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பட்டம் பெற்றவர்.

நடிகை அபர்ணாதாஸ்..

முதுகலை படிப்பை முடித்த இவர் ஒரு கணக்காளராக பணியாற்றும் போது பத்திரிகைகளுக்கு மாடலாக இருந்திருக்கிறார். அத்தோடு டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்தவர்.

டிக் டாக் வீடியோவை பார்த்து 2018 நான் பிரகாஷ் நடிக்க கூடிய வாய்ப்பை கொடுத்தார்கள். அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் 2019 – இல் மனோகரன் படத்தில் வினித் ஸ்ரீனிவாசனுக்கு ஜோடியாக நடித்தார்.

தமிழை பொறுத்த வரை 2022-ல் மிருகம் படத்தில் 2023-ல் டாடா படத்திலும் நடித்திருக்க கூடிய இவர் இசை காணொளிகளில் தனது அற்புத திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இப்படித்தான் என்னை கவுத்தார்..

அண்மையில் வெளி வந்த மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு அதிக அளவு வசூலையும் பெற்று தந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இந்த படத்தில் நடித்திருந்த தீபக் ராம் பாலோடு டாடா படத்தில் நடித்த நடிகை அபர்ணா தாஸ் கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் மிகவும் எளிமையான முறையில் ஏப்ரல் 24-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள்.

காதல் திருமணத்தைப் பற்றி இது வரை வாய் திறக்காத அபர்ணா தாஸ் தற்போது வாய் திறந்து பேசி இருக்கிறார்.

அதில் 2019-ஆம் ஆண்டில் வெளியான மனோகரன் படத்தில் நடிக்கும் போது இருவர் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி திருமணத்தில் முடிந்துள்ளது என்று சந்தோசத்தோடு கூறி இருக்கிறார்.

மேலும் அண்மை பேட்டியில் இவர் காதல் பற்றி பேசும் போது தீபக்கை முதன் முதலில் வடக்கஞ்சேரியில் உள்ள ஒரு ஹோட்டலில் பார்த்தேன்.

அவர் சாப்பிட்டு விட்டு கை கழுவுகின்ற இடத்தில் என்னை பார்த்ததும் தீபக் வணக்கம் சொன்னார் அந்த குணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

மேலும் மனோகரன் படத்தில் இணைந்து நடித்த போது அவர் என்னை என்ன செய்தார் என்று இன்றுவரை நினைவில் இல்லை எனும் எங்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

காதல் கணவர் குறித்து பேச்சு..

இந்த காதலைப் பற்றி முதன் முதலில் தீபக் தான் என்னிடம் சொன்னார் அவர் காதலை சொன்ன விதமே எனக்கு பிடித்திருந்தது என்னுடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு தான் பணம் உள்ளது.

நான் அதிகம் கோபப்படுவேன் பணம் இல்லாவிட்டால் நாம் மிகவும் கஷ்டப்பட வேண்டும் ஆனால் நான் இருக்கும் வரை உன்னை நன்றாக பார்த்துக் கொள்வேன் உன்னை திருமணம் செய்து வாழ ஆசைப்படுகிறேன் என புரபோஸ் செய்தார்.

இந்த அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்ததை அடுத்து வீட்டில் கலந்து பேசி எந்த பிரச்சனையும் இல்லாமல் எந்த திருமணம் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்களோடு நடந்து முடிந்தது என்றார்.

இப்போது இந்த விஷயம் தான் இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு ரசிகர்களின் மத்தியிலும் பேசும் பொருளாக மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version