அப்பா படத்தில் நடிச்ச பையனா இது..? – இப்போ எப்படி இருக்கார் பாருங்க..! – ஷாக் ஆகிடுவீங்க..!

பிரபல நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான அப்பா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகர் நசாத். இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் அவ்வப்போது கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றது.

அப்படியான படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் சமுத்திரகனி நடிப்பில் வெளியான அப்பா திரைப்படம் பள்ளி மாணவர்கள் மற்றும் வாழ்வியல் முறைகள் அவர்களை சுற்றி இருக்கும் நெருக்கடிகள் அவர் மீது கொடுக்கப்படும் அழுத்தங்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் உள்ளிட்ட யதார்த்த உண்மைகளை அடக்கி ஒரு திரைப்படமாக வெளியானது.

இந்த திரைப்படத்தில்,  தன்னுடைய குழந்தையை அவனுடைய விருப்பத்தில் வளர வேண்டும் என்று நினைக்கும் ஒரு தந்தை… தன்னுடைய குழந்தையை தன்னுடைய விருப்பத்தின் பேரில் வளர்க்கும் ஒரு தந்தை.. இருவருக்குள்ளும் இருக்கும் கருத்து வேறுபாடுகள் அந்த கருத்து வேறுபாடுகளால் அந்த குழந்தைகளுக்கு ஏற்பட்ட அழுத்தங்கள் போன்றவற்றை தத்ரூபமாக எதார்த்தமாக படமாக்கி வெளியிட்டிருந்தார்கள்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்று கூறலாம். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக பள்ளி மாணவனாக நடித்திருந்த நசாத் நடித்திருந்தார்.

குழந்தையை அவன் விருப்பப்படி வாழ விடும் ஒரு தந்தை.. குழந்தையை தன் விருப்பப்படி வாழ வேண்டும் என நினைக்கும் ஒரு தந்தை.. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு தந்தை இருப்பார்.

அவர்தான் இந்த நசாத்தின் தந்தை. இருக்கிற இடம் தெரியாமல் இருந்துட்டு போயிடனும்.. நம்மை எதிலும் பிரதான படுத்திக்கொள்ள கூடாது. ஜெயிக்கவும் தேவையில்லை.. தோற்கவும் தேவையில்லை என்ற ஒரு கொள்கையைக் கொண்ட ஒரு தந்தை.

அந்த தந்தையின் மகனாக நடித்திருந்தார் நடிகர் நசாத். தன்னுடைய அபாரமான நடிப்பு திறமையால் ரசிகர்களின் பாராட்டை பெற்ற இவர் தற்போது நன்றாக வளர்ந்து இருக்கிறார். இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அப்பா படத்தில் நடித்த சின்ன பையனா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …