AR Rahman Rocked.. Ambani Shocked.. உலகிலேயே அதிக செலவில் திருமணம்.. ஆனால்..

உலக அளவில் பணக்காரரான அம்பானிக்கு சொத்து மதிப்பு எவ்வளவு என்பது பலரும் அறியாத விஷயமாக இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் அவரது மகனின் திருமணத்தை அவர் கோலாகலமாக நடத்தியதன் மூலமாக எத்தனை கோடிகளுக்கு அம்பானி முதலாளியாக இருக்கிறார் என்பது பலருக்குமே கேள்வி எழுப்பும் விஷயமாக இருக்கிறது.

உலகத்தில் இதுவரை நடந்த திருமணத்திலேயே மிகவும் அதிக செலவு செய்த திருமணமாக அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு இங்கிலாந்து மகாராணியின்  திருமணம் நடந்த போது கூட இவ்வளவு செலவு செய்யப்படவில்லை என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

அம்பானி வீட்டு கல்யாணம்:

இந்த நிலையில் இதற்கு முன்பு தன்னுடைய மகள்களுக்கு இவ்வளவு அதிக செலவு செய்யாத முகேஷ் அம்பானி ஏன் தனது மகனுக்கு இவ்வளவு செலவு செய்கிறார் என்று பார்க்கும் பொழுது அதற்கு அவர் மகனுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மைதான் காரணம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

இதற்கு நடுவே பண திமிறை காட்டுவதற்காக அம்பானி பெரும் பொருட் செலவில் திருமணம் செய்கிறார் என்று ஒரு சாரார் பேசி வருகின்றனர் இன்னொரு சாரார் பேசும் பொழுது பொதுவாகவே இந்தியாவில் திருமணத்திற்கு அதிக செலவு செய்கின்றனர்.

சாதாரண மனிதர்களே அதிக செலவு செய்யும் பொழுது இவ்வளவு கோடி வைத்திருக்கும் அம்பானிக்கு 5000 கோடி ஒரு பெரிய ரூபாய் இல்லை என்பதால் அவர் தயக்கம் இன்றி செலவு செய்திருக்கிறார் என்று இது குறித்து ஒரு பக்கம் ஆதரவான விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இந்த திருமணத்தை இன்னும் சிறப்பாக்க இந்தியாவில் பிரபலமாக இருந்த பலரையும் திருமணத்திற்கு அழைத்து இருந்தார் முகேஷ் அம்பானி. அந்த வகையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் பிரபலமாக இருந்த நடிகர்களும் நடிகைகளும் இந்த திருமணத்திற்கு வருகை புரிந்திருந்தனர்.

ஏ.ஆர் ரகுமான் செய்த வேலை:

மேலும் பல அரசியல்வாதிகளும் கூட இந்த திருமணத்தில் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் திருமணத்திற்கு சென்ற ஏ.ஆர் ரகுமான் அங்கேயும் மாஸ் காட்டி செயல் ஒன்றை செய்திருக்கிறார்.

முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்தில் ஏ.ஆர் ரகுமான் பாட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து ஒரு பாட்டு கச்சேரியையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஏ.ஆர் ரகுமான் பாட சென்ற பொழுது முக்கால்வாசிக்கு தமிழ் பாடல்களை மட்டுமே பாடி இருக்கிறார் ஏ.ஆர் ரகுமான்.

அங்கு வந்திருந்த பெண்கள் ஹிந்தியில் பாடல்களை பாடிய பொழுதும் தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான் மட்டும் தமிழிலேயே பாடியிருக்கிறார் இத்தனைக்கும் முகேஷ் அம்பானியின் திருமணத்திற்கு வந்த முக்கால்வாசி பேர் ஹிந்தி மட்டுமே பேச தெரிந்தவர்கள்தான். அவர்களுக்கு தமிழே தெரியாது இருந்தாலும் வழக்கம் போல தனது தாய் மொழியை விட்டுக் கொடுக்காத ஏ.ஆர் ரகுமான் அந்த திருமணத்திலேயே தமிழில் பாடி அசத்தியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version