Goosebumps : அரபிக்குத்து – தியேட்டர் ரெஸ்பான்ஸ் பாருங்க..! – வைரல் வீடியோ..!

விஜய் நடித்துள்ள பீஸ்ட் ( Beast ) திரைப்படத்தின் “அரபிக்குத்து” ( Arabi Kuthu ) என்ற பாடல் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் அனிருத்துடன் இந்தப் பாடலை பின்னணி பாடகி ஜொனிதா காந்தி இணைந்து பாடியுள்ளார்.

சுமார் 4.42 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் வெளியிடப்பட்டுள்ள அரபிக் குத்துப் பாடல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடல் வெளியாவதற்கு முன்பிருந்தே விஜய் ரசிகர்களின் இணையத்தில் ஏராளமானோர் காத்திருந்தனர்.

மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட 12 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வையைக் கடந்துள்ளது அரபிக் குத்து பாடல் வீடியோ.நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ஏப்ரல் 14-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகள் எப்போது துவங்கும் என்று விஜய் ரசிகர்கள் பெரும் ஏக்கத்துடன் இருந்தார்கள்.

இந்நிலையில், நேற்று வெளியான இந்த பாடலின் லிரிக் வீடியோவை திரையரங்கு ஒன்றில் நேற்று ஒளிபரப்பு செய்துள்ளனர். அப்போது ரசிகர்கள் எப்படி ரியாக்ட் செய்துள்ளனர் என்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *