மயிரிழையில் உயிர் தப்பிய அறந்தாங்கி நிஷா…! மகளுக்கு நடந்த பிரமாண்ட விழா..! கண்கலங்கும் தாய் பாசம்..!

மேடைகளில் காமெடி செய்து பிறகு விஜய் டிவியின் மூலமாக அதிகமான மக்கள் மத்தியில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு உருவம் ஒரு தடை கிடையாது என்று நிரூபித்த ஒரு சில பிரபலங்களில் அறந்தாங்கி நிஷாவும் ஒருவர்.

அவர் தன்னுடைய வாழ்க்கை நிகழ்வு ஒன்றை சமீபத்தில் பகிர்ந்து இருந்தார் அது மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து மக்கள் மத்தியில் அறிமுகமானார் அறந்தாங்கி நிஷா.

சின்னத்திரையில் பிரபலம்:

அதன் பிறகு அவளுக்கு அவருக்கு விஜய் டிவியில் நிறைய வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. அதனை தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க துவங்கினார். அறந்தாங்கி நிஷா நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராவார்.

aranthangi nisha2

அறந்தாங்கி நிஷாவிற்கு விஜய் டிவியில் கிடைத்த வாய்ப்புகள் பெரும் உதவியாக இருந்தன. அதன் மூலமாக அவர் கொஞ்சம் கொஞ்சமாக அவரது வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொண்டார். விஜய் டிவியில் கிடைத்த பிரபலத்தின் மூலமாக தொடர்ந்து நிறைய பட்டிமன்றங்கள் மற்றும் விழாக்களில் கலந்து கொள்வதற்கு அறந்தாங்கி நிஷாவிற்கு வாய்ப்பு கிடைத்தது.

அதன் மூலம் நிறைய வருமானம் ஈட்டினார். அதே சமயம் நிறைய மக்களுக்கு உதவியும் செய்து வருகிறார். கடந்த புயல் பாதிப்பு ஏற்பட்ட சமயத்தில் கூட சென்னையில் பல குடும்பங்களுக்கு உதவி செய்தார் அறந்தாங்கி நிஷா.

வாழ்க்கையில் நடந்த விபத்து:

இவ்வளவு உதவிகளை செய்த அறந்தாங்கி நிஷா வாழ்வில் நடந்த துயரமான சம்பவம் ஒன்றை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார். அவருக்கு குழந்தை பிறந்த சில நாட்களில் ஒருநாள் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது அந்த கார் விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

அந்த விபத்தில் தன்னுடைய மகள் பிழைத்ததே அபூர்வம் என்று கூறுகிறார் அறந்தாங்கி நிஷா. ஆனால் அந்த விபத்துக்குப் பிறகு சின்ன அதிர்வுக்கு கூட அதிர்ச்சியாக கூடிய ஒரு நிலைக்கு தன்னுடைய மகள் சென்று விட்டதாக கண்கலங்கி கூறியிருந்தார் அறந்தாங்கி நிஷா.

அதனாலேயே அவருக்கு இன்னும் காது குத்தாமல் இருப்பதாக அவர் கூறியிருந்தார். அந்த விபத்து நடந்த சமயத்தில் அந்த பக்கமாக சென்று கொண்டிருந்த இளைஞர்கள்தான் எங்களை தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினார்கள்.

ஆனால் அவர்களது பெயர் கூட என்னவென்று எனக்கு தெரியவில்லை ஆனால் அவர்களின் மடியில் வைத்துதான் எனது குழந்தைக்கு காது குத்துவேன் என்று அறந்தாங்கி நிஷா கூறி இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவருடைய மகளுக்கு காது குத்தி இருந்தார் அறந்தாங்கி நிஷா இதற்கு பலரும் அவரை பாராட்டி குழந்தைக்கு ஆசீர்வாதம் அளித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version