அட வெக்கம் கெட்டவளே.. புருஷன் கூட எதுக்கு டி.. மேடையில் VJ மணிமேகலையை கிழித்த சக நடிகை..!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவராக மீடியா உலகில் அறிமுகமான விஜே மணிமேகலை அஞ்சனாவுடன் சேர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி 90ஸ் கிட்ஸ்களின் பேவரட் ஆன தொகுப்பாளர்களுள் ஒருவராக இருந்து வந்தார் .

90ஸ் கிட்ஸ் பேவரைட் தொகுப்பாளினி:

சமீப நாட்களாக மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக பணியாற்றி 2k கிட்ஸ்களுக்கும் கூட ஃபேவரட் ஆன தொகுப்பாளினியாக மணிமேகலை எல்லோரது மனதையும் கவர்ந்து விட்டார்.

அதுமட்டுமில்லாமல் அவர் குக் வித் கோமாளி நிகழ்சியில் பங்கேற்றதன் மூலமாக தான் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையும் மிகப்பெரிய அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொண்டார்.

கிராமத்தில் மணிமகேலை:

முன்னதாக கொரோனா காலகட்டத்தில் லாக்டவுன் சமயத்தில் கிராமம் ஒன்றுக்கு சென்று மாட்டிக்கொண்ட மணிமேகலை தன்னுடைய கணவருடன் அங்கிருந்தபடியே கிராம மக்களுடன் கிராம நண்பர்களுடன் வீடியோ எடுத்து வெளியிட்டது மிகப்பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்தது .

அதன் மூலம் தான் விஜய் டிவியில் பங்கேற்று தொடர்ச்சியாக அடுத்த அடுத்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவே துவங்கியது.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய மணிமேகலை தனக்கென சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை வைத்துக்கொண்டு அதில் பல வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் .

சொகுசு வாழ்க்கை வாழும் மணிமகேலை:

அதன் மூலம் அவர் கணிசமான வருமானத்தையும் சம்பாதித்து வருகிறார். தற்போது சொகுசு கார், சொந்தமான வீடு, சென்னையில் ஒரு அப்பார்ட்மெண்ட் இப்படி சகல வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்து வருகிறார்.

மணிமேகலை நடன கலைஞரான முகமது உசேன் என்பவரை காதலித்து பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு மணிமேகலையின் பெற்றோர் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தனர். பின்னர் பல வருடங்கள் கழித்துதான் தம்பி மற்றும் அம்மா என பேச ஆரம்பித்து தற்போது குடும்பத்தோடு மிகுந்த மகிழ்ச்சியாகவும் மணிமேகலை வாழ்ந்து வருகிறார்.

அறந்தாங்கி நிஷா Vs மணிமேகலை சண்டை:

தற்போது நட்சத்திர தொகுப்பாளினியாக இருந்து வரும் மணிமேகலைக்கு சமீபத்தில் பிரபல தனியார் youtube சேனல் ஒன்று விருது வழங்கியிருக்கிறது.

அப்போது அவருக்கு விருது கொடுக்க அறந்தாங்கி நிஷாவை மேடைக்கு அழைத்து இருக்கிறார்கள். ஆனால் மணிமேகலை அவர் கையால் நான் விருதை வாங்க மாட்டேன் .

நான் எத்தனையோ பேருக்கு விருது அழைத்துக் கொடுத்திருக்கிறேன். எனக்கு இவர் கொடுக்க வேண்டுமானால் எனக்கு அப்படிப்பட்ட விருதே வேண்டாம்.

என் கையிலே கொடுத்திடுங்க நான் வாங்கிட்டு போகிறேன்.. கொடுங்க என கேட்டு சண்டையிட்டார்.

வா… சோட்டி நம்மளே நம்மளே விருதை வாங்கிட்டு போயிட்டே இருக்கலாம் என தன் கணவரையும் மேடைக்கு அழைத்தார் மணிமேகலை.

வெக்கம் கெட்டவளே.. புருஷன் கூட எதுக்கு?

உடனே அறந்தாங்கி நிஷா… என்னடி சொட்டி… சுவரொட்டின்னு….கூப்பிட்டா உடனே வந்திடுவியா? உனக்கு யாருடி விருது கொடுக்க வந்தது?

இவளுக்கு அவார்டு கொடுக்கறதுக்கு நான் கொடுக்கலாமே இருக்கலாம். அட வெக்கம் கெட்டவளே.. ஏண்டி புருஷனோட வந்த என கேட்டு சண்டையிட அந்த அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது

நீ என்ன வர மாட்டேன்னு சொல்றது? நானே கிளம்பி போறேன் என்று விருது மேடையில் இருந்து இறங்கி செல்ல அவர்கள் இருவரின் சண்டையை பார்த்து அந்த ரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version