“ஒரே ஒரு பூசணிக்காய் போதும்..” – நாவை அடிமையாக்கும் சுவையான சைவ குடல் சட்னி தயார்..!

பூசணிக்காய் சட்னி : அசைவப் பிரியர்களின் வீட்டில் மட்டும் தான் குடல்  சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களை  சுவைக்க முடியுமா. அதையும் தாண்டி சைவர்கள் சமைக்க கூடிய அரசாணிக்காய் குடல் சட்னி கூடுதல் சுவையோடு அனைவரையும் மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டக்கூடிய அளவு சுவையோடு சத்துக்களும் நிறைந்தது.

 அந்த அரசாணிக்காய் குடல் சட்னியை எப்படி செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

 குடல் சட்னி செய்ய தேவையான பொருட்கள்

1.நன்கு பழுத்த அரசாணியின் உள் இருக்கக் கூடிய குடல் பகுதி 200 கிராம்

2.உளுந்து பருப்பு 50 கிராம்

3.கடலை பருப்பு 50 கிராம்

4.வர மிளகாய் 4

5.தேங்காய் துருவல் அரைக்கப்

6.உப்பு தேவையான அளவு 7.பெருங்காயத்தூள் தேவையான அளவு

8.சிறிதளவு புளி

9.எண்ணெய் தேவையான அளவு

 செய்முறை

முதலில் அரசாணிக்காயின் உள்வெடுக்கக்கூடிய குடலை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த குடலில் ஒட்டி இருக்கக்கூடிய விதைகளை முற்றிலும் நீக்கிவிட்டு தண்ணீரில் நன்கு கழுவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

 பின்னர் எதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும் அடுப்பில் ஒரு வானிலையில் போதுமான அளவு எண்ணெயை ஊற்றி முதலில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைபருப்பு இவற்றை வறுத்துக் கொள்ளுங்கள்.

 இதனை அடுத்து நான்கு வர மிளகாய்  போட்டு வறுக்க வேண்டும். இவை பொன்னிறமாக வறுபட்டவுடன் நறுக்கி வைத்திருக்கும் அரசாணி குடலை அதில் போட்டு நன்கு வதக்கவும்.

 பச்சை வாசம் நீங்கிய நிலையில்  வறுத்த பொருட்களை குளிர்ந்த பின் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து விடவும். இப்போது சுவையான வைட்டமின் ஏ சத்து நிறைந்த அரசாணி உடல் சட்னி தயார்.

 இந்த சட்னியோடு சிறிதளவு நெய் சேர்த்து சுட சுட சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் படு சூப்பராக இருக்கும். நீங்களும் ஒருமுறை இந்த குடல் சட்னியை செய்து பாருங்கள்.

 கேரட்டில் இருப்பது விட அதிக அளவு வைட்டமின் ஏ யை தரக்கூடிய அற்புதமான குடல் சட்னியை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை அதிகரிக்கும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam