சுருட்டு புடிச்சிகிட்டே இதை பண்ணனும்ன்னு ஆசை.. கூச்சமின்றி கூறிய நடிகை அர்ச்சனா..!

தமிழில் சின்ன தொலைக்காட்சிகளில் சீரியலில் பிரபலமாக இருக்கும் ஒரு சில நடிகைகளில் பிரபலமானவர் நடிகை அர்ச்சனா மாரியப்பன். சீரியல்களில் குடும்ப குத்து விளக்காக பாரம்பரியமான பெண்ணாக இவரை பார்க்க முடியும்.

சீரியல் மட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.  சிம்பு நடித்த வாலு திரைப்படத்தில் வரும் ஒரு கவுன்சிலர் கதாபாத்திரத்தின் மனைவியாக இவர் நடித்திருப்பார்.

நாடக பிரபலம்:

அதே மாதிரி நாடோடிகள், வெள்ளைக்காரத்துரை, முத்தின கத்திரிக்காய் போன்ற திரைப்படங்களில் அர்ச்சனா மாரியப்பன் நடித்திருப்பதை பார்க்க முடியும். ஆனால் அந்த மாதிரியான எந்த ஒரு திரைப்படத்திலும் அவருக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் என்பது கிடைத்தது கிடையாது.

துணை கதாபாத்திரங்களாகதான் அவர் நடித்திருப்பார் அதனால் அவர் அந்த படங்களில் எல்லாம் நடித்திருந்தாலும் கூட பெரும்பாலானவருக்கு அவரை தெரியாது. ஏனெனில் அந்த கதாபாத்திரத்தை அவ்வளவாக யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.

சீரியல் சினிமா என்று இரண்டு துறையிலும் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகிறார் அர்ச்சனா மாரியப்பன். சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் அவர் பேசும்பொழுது அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்த கேள்விக்கு அவரும் இந்த மாதிரி அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகளை தமிழ் சினிமாவில் அனுபவித்திருப்பதாக கூறி சர்ச்சையை கிளப்பியிருந்தார்.

சர்ச்சை பேட்டி:

திரைப்படங்களுக்கு நடிப்பதற்கு ஆடிஷனுக்கு செல்லும் பொழுது இயக்குனர்கள் அந்த மாதிரி நடந்து கொண்டதாக ஒருமுறை அவர் பேசியது மிகவும் வைரலாகி இருந்தது. இப்படி பேட்டிகளில் அடிக்கடி வைரலாகும் கண்டெண்டுகளை கொடுப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார் அர்ச்சனா மாரியப்பன்.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவர் பேசும்பொழுது நான் இதுவரை நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் எனக்கு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க மட்டும் வெகு நாட்களாக ஆசை. சுருட்டுப் பிடித்துக் கொண்டே இருக்கும் ஒரு கதாபாத்திரமாக நடிக்க எனக்கு ஆசை.

ஆனால் இதுவரை அப்படியான எந்த ஒரு கதாபாத்திரமும் எனக்கு அமையவில்லை என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார் நடிகை அர்ச்சனா. இந்த பேட்டியானது நெட்டிசன்கள் மத்தியில் சர்ச்சையாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version