பள்ளியில் படிக்கும் போது ஆண் நண்பருடன் இதை பண்ணேன்.. வெக்கமே இல்லாமல் கூறிய அர்ச்சனா..!

சீரியல் மற்றும் சினிமா என்ற இரட்டை குதிரையில் பயணித்து வரும் அர்ச்சனா மாரியப்பன் பற்றி உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. இவர் தமிழக மக்களின் மனதில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கக்கூடியவர்.

சமூக வலைத்தளங்களிலும் படு பிசியாக இருக்கக் கூடிய இவர் ரசிகர்களை கவர்ந்த ஈர்ப்பதற்காக தாறு மாறான போஸ்சில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையை கிளறி விடுவார்.

அர்ச்சனா மாரியப்பன்..

சின்ன திரை சீரியலைப் பொறுத்த வரை இவர் வாணி ராணி, அழகி, வள்ளி, அழகு உள்ளிட்ட சீரியல்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் பெரும் பாலான சீரியல்களில் வில்லியாக நடித்து ரசிகர்களின் மனதை அள்ளி சென்றவர்.

பெரிய திரையை பொருத்த வரை இவர் கிடைக்கின்ற சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களை பக்குவமாக செய்ததன் மூலம் ரசிகர்களின் வட்டாரம் அதிகரித்தது. அந்த வகையில் இவர் போகி, முத்தின கத்திரிக்காய், வெள்ளைக்காரத்துரை, நாடோடிகள் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

அத்தோடு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று பெரிய அளவில் ஆசைப்படும் இவருக்கு  இன்று வரை துணை கதாபாத்திரங்களே கிடைத்துள்ளது. எனினும் எப்படியும் ஹீரோயினியாக நடித்து விடுவோம் என்ற எண்ணத்தில் தான் அவர் இன்றும் இருக்கிறார்.

பள்ளியில் படிக்கும் போது ஆண் நண்பருடன்..

இந்நிலையில் அர்ச்சனா மாரியப்பன் அண்மை பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்களை  ரசிகர்களுக்காக பகிர்ந்து இருக்கிறார். மேலும் இந்த பேட்டியின் போது தொகுப்பாளனி வெவ்வேறு கேள்விகளை கேட்க அந்த கேள்விகளுக்கு மிகவும் சாமர்த்தியமாக பதில் அளித்திருக்கிறார்.

அந்த வகையில் தொகுப்பாளினி பள்ளியில் படிக்கும் போது மறக்க முடியாத அனுபவம் ஏதேனும் உள்ளதா? என்று கேட்டதற்கு அர்ச்சனா மாரியப்பன் சூப்பராக பதிலளித்திருக்கிறார். இதில் அவரது பள்ளிப் பருவ வாழ்க்கையை இன்று வரை மறக்க முடியாது என்று கூறினார்.

மேலும் சிறு வயதில் முத்தம் குறித்த அனுபவம் ஏதாவது உள்ளதா? என்று கேட்டதற்கு அது போன்ற அனுபவம் பள்ளியில் படிக்கும் போதே ஆண் நண்பருடன் நடந்து விட்டது என்ற ஷாக்கிங் செய்தியை பகிர்ந்து இருக்கிறார்.

வெட்கமே இல்லாமல் கூறிய விஷயம்..

அர்ச்சனா மாரியப்பன் வெக்கமே இல்லாமல் தனக்கு கிடைத்த முதல் முத்த அனுபவத்தை பற்றி பகிர்ந்ததோடு, ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது விளையாட்டு பீரியடில் கிரவுண்டில் இருக்கும் போது ஒரு பையன் தனக்கு கிஸ் அடித்ததாக வெட்கமில்லாமல் சொல்லிவிட்டார்.

இதனைக் கேட்டு கற்பனை உலகுக்குச் சென்ற தொகுப்பாளினியிடம் அவசர, அவசரமாக அவர் எனக்கு முத்தம் கொடுத்தது உதட்டில் அல்ல கன்னத்தில் தான் என்று சொன்னார்.

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் பள்ளியில் படிக்கும் போதே ஆண் நண்பருடன் இதை பண்ணிவிட்டார் அர்ச்சனா மாரியப்பன் என்று சொல்லி வருவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை ஷேர் செய்து வைரலாக்கி விட்டார்கள்.

அத்துடன் இந்த விஷயமானது இணையத்தில் தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளதோடு மட்டுமல்லாமல் அர்ச்சனா மாரியப்பனின் முத்த அனுபவம் குறித்து அனைவரும் பேசி வருகிறார்கள்.

மேலும்  இந்த பேட்டியில் சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்ட அர்ச்சனா மாரியப்பன் விரைவில் திரைப்படங்களில் ஹீரோயினியாக நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேரும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version